Monday, October 10, 2016

பண்டைய நீர்வளம்

பண்டைய நீர்வளம்
===============

இன்றைக்கு நதிநீர் சிக்கல்களை பேசுகின்றோம். வளத்தின் அடிப்படை நீர். நீர் ஆதாரம் இல்லாமல் எதுவும் இல்லை. நீர் பெருகி, ஆறுகளில் பாயும்போதுதான் ஆற்றங்கரையோரத்தில் நாகரீகங்கள் வளர்ந்தன. நதிக்கரைகளையும், பசுமைச் சோலைகளையும் மானிடம் உருவாக்கியது. அதனால் நாகரீகம், கலை, மொழி என அனைத்து செல்வங்களும் வளர்ந்தன.  அந்த இயல்பான இயற்கையின் வளர்ச்சிக்கு நீர், மழையால் பெறுகின்றது.  பட்டினப்பாலையில் இது குறித்து வந்த பாடல் வருமாறு....

மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அமைந்த அழியாப் பல பண்டம் 

- (பட்டினப்பாலை - 126 - 131)

கடல்நீர் அக்னியில் ஆவியாகி மேகக் கூட்டமாகத் திரண்டு மழை என்ற அருட்கொடையை வழங்குகிறது என அன்றைக்கே அறிவியல் அறிவை நமது சங்கத் தமிழ் 'பா'க்களில் படிக்க முடிகிறது. மேகங்களே பல வகையாக ஆதிகாலத்தில் பிரிக்கப்பட்டன.  அவை..... கீற்றுமுகில், கீற்று திறன் முகில், கீற்று படர் முகில், இடைப்பட்ட திரள் முகில், இடைப்பட்ட படர் முகில், கார் முகில், படர் திறள் முகில், படர் முகில், திரள் முகில், திரள் கார்முகில்.

இப்படி பண்டையத் தமிழர்கள் நீர் மேலாண்மை குறித்து அன்றே அறிந்துள்ளனர். அந்த சூழலில்தான் பொருநை நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் நாகரீகம், வைகை நதிக்கரையில் கீழடி நாகரீகம், காவிரிக் கரையில் பூம்புகார் நாகரீகம் என ஆற்றங்கரை நாகரீகங்கள் நீர் வளத்தால் தோன்றின. 

#பண்டையநீர்வளம் #ksrposting #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...