Saturday, October 8, 2016

ஜெயலலிதா - வாஸந்தி


இந்தியா டுடே (தமிழ்) முன்னாள் ஆசிரியர் அன்புக்குரிய வாஸந்தி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Jayalalithaa - A Portrait - பென்குயின் பதிப்பகம் வெளியிட்டு விற்பனைக்கு வரும்பொழுது, முதல்வர் ஜெயலலிதா 2011ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த நூல் வெளிவராமல் தடைபெற்று நூலின் விற்பனைக்கும் தடை செய்தார்.

பென்குயின் நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டையோ அல்லது தடையை விலக்கக் கோரியோ மனு செய்யாமல் விட்டுவிட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வாஸந்தி அவர்கள் 300 பக்கத்துக்கு மேல் விரிவான தொகுப்பாக இந்த நூலை எழுதியிருந்தேன் என்று என்னிடம் கூறினார். திரு. இராம வீரப்பன், பத்திரிகையாளர் சோலை, ராண்டர் கை, முன்னாள் அமைச்சர் செ.மாதவன், நடிகை சச்சு, ஸ்ரீமதி, ஜெயலலிதாவின் அண்ணியார் விஜயலட்சுமி ஜெயக்குமார், அவருடைய சர்ச் பார்க் ஆசிரியர்கள், குறிப்பாக கீதா தாஸ், திருமதி சாந்தினி, சிவசங்கரி என ஜெயலலிதாவிடம் நெருக்கமாக பழகியவர்கள் மட்டுமல்லாமல், என் போன்ற சில நண்பர்கள் குறிப்பாக கே.எம். விஜயன், பதர் சையது, சுதாங்கன், பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற பத்திரிகையாளர்களிடம் எல்லாம் ஜெயலலிதாவை பற்றி விரிவாக அறிந்து இந்த புத்தகப் பணியை முடித்தார்.  இதில் ஜெயலலிதா குறித்தான சில முக்கிய சுவாரஸ்யமான நிகழ்வுகள், விமர்சனங்கள், அவருடைய ஆற்றல்களைப் பற்றியெல்லாம் எழுதியுள்ளதாக வாஸந்தி என்னிடம் தெரிவித்திருந்தார்.  இவ்வளவு சிரமங்கள் எடுத்து எழுதிய நூல் வெளிவரவில்லையே என்ற கவலை வாஸந்தியினுடைய நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு.  இந்த நூல் தற்போதாவது வெளிவந்தால், அனைவரும் ஜெயலலிதாவை பற்றி அறிந்துகொள்ள முடியும். இது சரியான சூழல். இதற்கான முயற்சிகளை பென்குயின் நிறுவனம் எடுக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.

இந்த நூலைப் பற்றி ஆங்கில Outlook வெளியிட்ட செய்திக் கட்டுரையும், நூலின் முகப்பு அட்டையும் இதோ....




No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...