Wednesday, October 26, 2016

தமிழக நதிநீர் உரிமைகள்.

தமிழக நதிநீர் உரிமைகளை இந்திய அரசு மறுக்கினறது.வடகிழக்கு பருவக்காற்று தமிழகத்திற்கான  முக்கிய மழைப்பொழிவைதர இருக்கின்றது.
இந்த மழைப்பொழிவை  அணைகட்டி தேக்கி மீண்டும் வயலுக்கு பாய்ச்சுவது பெரிய கட்டுமானங்களை  செய்யவேண்டி வரும். 

வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்  என்ற பாடலுக்கு  ஏற்றவாறு நெல் வயலின் வரப்புகளை உயர்த்தி போதிய அகலத்துடன்  அமைத்தால் பெய்கின்ற மழையின் பெரும்பகுதியை  நாம்தேக்கிவிடலாம்.நாம் நெல் பயிரிடும் பரப்பு 42,63,220 ஏக்கர்கள்.ஒரு அடி உயரம் நீரைத் தேக்கினால் ( அதிக பட்ச ஆண்டு மழைப்பொழிவு 3 அடி ) எல்லாவயல்களிலும் நமக்கு கிடைக்கும்  நீரின் அளவு  184 டிஎம்சி. இதற்கு நாம் பாரம்பரிய நெல்ரகத்தை  ஆவணி மாதம் நட்டுவிடவேண்டும்.வரப்புகளை  எடுத்துக் கட்டும் வேலையை விவசாயி களிடம்விட்டு விட்டு செலவுத்தொகையாக அரசு ஒரு தொகையைத் தரலாம்.

சாகுபடிக்கு நீர் சேமிக்கப்படுவதோடு பருவமழை ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே  வெள்ளம்,கரை உடைந்தது,வீடு இடிந்தது என்ற அபசுரக்குரல்கள் எழாது.தேக்கியது போக திரண்டு வரும் நீரை  அந்த நிலப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்குள்  ஒரு வடிகட்டி வாய்க்கால் (Filter bed with gravel,sand etc ) வழியாக செலுத்தலாம்.மிகக்குறைந்த செலவிலான திட்டம் இது.காவிரி டெல்டா  பகுதியில்அணைகட்டி நீரை தேக்கமுடியாது.ஆனால் நிலத்தடி நீராக செய்யமுடியும்.   

எண்ணெய்க் கம்பெனிகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தி உப்புக்கரைசலாக  ஆக்கிவிட்டன. பெரிய அளவில் நாம் மழைநீரை  நிலத்தடிக்கு  உட்செலுத்தினால்  நிலத்தடி நீரின் அளவு உயரும்.நீரின் தரம் சீராகும்.கிணறுகளில் நீர் ஊறும். ஆழ்துளைக்கிணறுகளில்  நீர்மட்ட உயர்வாலதிக நீர் கிடைக்கும்.பகுதியின் மின்சாரசக்தியின் அளவு குறையும்.100 அடி ஆழத்தில் உள்ள நீர் 50 அடிக்கு உயர்ந்தால் நீரிறைக்க ஆகும் மின் சக்தி  பாதியாக குறையும். பற்றாக்குறை மின்சக்தி நிலவும் சூழலில் அரசு சந்தையில் இருந்து வாங்க வேண்டிய மின்சக்தி பெருமளவு குறையும்.

தமிழகத்தின் அனைத்து ஏரி,கண்மாய்,குளம் ஆகியவைகள் தூர்வாரப்பட்டு  நீர் நிரப்பப் படவேண்டும்

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...