Friday, October 28, 2016

ஆட்டுச்சந்தை- எட்டயபுரம் :

ஆட்டுச்சந்தை- எட்டயபுரம் :
.............................................
தென் மாவட்டங்களில் பிரச்சித்தி பெற்ற ஆட்டு சந்தைகளில் மிகவும் முக்கியமான ஆட்டுசந்தை கோவில்பட்டி அருகேயுள்ள  ஆட்டுசந்தைதான். எட்டயபுரம் ஆட்டுசந்தையில் தரமான ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி, இங்குஆடுகள் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிகளவு வருவது இயற்கை, அது மட்டுமின்றி இந்த பகுதியில் நல்ல விவசாயம் நடைபெறுவதால் ஆடுகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்பதால் ஆடு வாங்குபவர்கள் எட்டயபுரம் சந்தையை நோக்கி வருவது வாடிக்கை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் எட்டயபுரம் சந்தையில் ஆடு வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வழக்கமாக வாரந்தோறும் சனிக்கிழமை தான் எட்டயபுரம் ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நாளை வருவதால் ஒரு நாள் முன்பாக இன்று காலையில் ஆட்டுசந்தை துவக்கியது. வழக்கமான சந்தையுடன் தீபாவளி பண்டிகையும் சேர்ந்து விட்டதால் மற்ற வாரங்களை இன்று அதிகாலையில் இருந்தே சந்தை களைகட்ட தொடங்கி விட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், கயத்தார், மற்றும் திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆடுகள்; வாகனங்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மழையின், வறட்சி போன்ற காரணங்களினால் கடந்த ஆண்டு தீபவாளி வியாபாரத்தினை விட சுமார் என்றாலும் கூட வியாபாரம் பரவ இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட ஆடுகளுக்கு நல்ல விலையும் கிடைத்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.10 கிலோ வரையுள்ள ஆடுகள் கடந்த ஆண்டு ரூ.4000 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது. இன்று ரூ.5000  வரை ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள், ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை என்பதால் மதுரை மாவட்டம் திருமங்கலம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்,கயத்தார் போன்ற பகுதிகளில் ஆட்டுசந்தைகள் நடைபெற்ற போதிலும் எட்டயபுரம் சந்தை குறிப்பிட தக்கது.
வேம்பார் ஆடுகள் இங்கு கிடைக்கும் . கிடை ஆடுகள்இங்குகிடைக்கும்


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...