Tuesday, October 25, 2016

கோவை

கோவை
.............
இன்றைய தினமணி இதழோடு( 25/10/16 ) கோவை நகரத்தை பற்றிய சிகரம் தொடும் நகரம் என சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

#கோவை நகரத்தை நிர்மாணித்தவருமான மறைந்த பா.நரசிம்மலு நாயுடு அவர்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லை ஆனால் அவர் கட்டிய கட்டிடத்தில் தான் கோவை மாநகர மன்றம் செயல்படுகிறது .      1892 ல் விக்டோரியா டவுன்ஹால் என்று அதை கட்டியவர் அவர் தான் .
கல்கத்தாவுக்கு சென்று பருத்தி அரவை இயந்திரங்களை வாங்கி வந்து கோவையில் பருத்தி தொழிலை தொடங்கியவர் அவர் தான் .

கோவை கம்பர் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராகவும் , காமராசருக்கு தளபதியாகவும் விளங்கிய  திரு கருத்திருமன் .

சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள்துனைவேந்தராகவும் ;
கலைக்கதிர் இதழின்  ஆசிரியர் , முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியின் நிறுவனுருமான  டாக்டர்  ஜி. ஆர் . தாமோதரன் .சர்க்கரை மன்றாடியார். திருப்பூர் நஞ்சப்பசெட்டியார் .
திருப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் கே.என்.   பழனிசாமி கவுண்டர் . பெத்தாம்பாளையம் பழனிச்சாமி கவுண்டர் .டாக்டர் இராஜம்மாள் தேவதாஸ் , நவ இந்தியா ஏட்டின் நிறுவனர் பி.ஆர்.ராமகிருஷ்ணன் மற்றும் இன்றைக்கும் திரையுலகில் ஜொளிக்கின்ற நடிகர் சிவகுமார் ஆகியோரை குறிப்பிடாமல் மலரில் விடப்பட்டுள்ளது என்பதை தினமணியின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் !!

2 comments:

  1. வணக்கம் சார்.. பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்களின் சொந்த ஊர் எது? தி.மு.க தனியாக வந்த பின்னர் அவர் வகித்த பதவிகள் என்னென்ன ?

    ReplyDelete
    Replies
    1. பல்லடம்...கோவை மாவட்ட தலைவர்..

      Delete

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...