Sunday, May 6, 2018

அரசியலுக்குள் நுழைபவர்களுக்கும் நுழைவுத் தேர்வு

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நிலையில் எல்லோரும் அரசியலுக்கு வரலாம் என்ற சூழலில் கடந்த காலங்களில் நல்லவர்கள் அரசியலுக்கு வந்ததுண்டு. அன்றைக்கு ஜனநாயகம் ஆரோக்கியமாக இருந்தது. இப்போது, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல தகுதியும், தரமும் இல்லாமல் ஒரு கட்சி ஆரம்பித்துக் கொண்டு நானும் தலைவன் என்று கொடியை பிடித்து அரசியலை வியாபாரமாக்கி விட்டார்கள் சில பிரகஸ்பதிகள்.
சுயபுகழுக்காக அரசியலுக்குள் பல தலைகள் தலைவர்களாக தலையெடுக்க முண்டிப் பார்க்கிறார்கள். அரசியலுக்குள் நுழைபவர்களுக்கும் நுழைவுத் தேர்வு வைத்தால் கசடுகளும், அழுக்குகளும் பொது வாழ்வில் தலை வைக்காமல் தவிர்க்கலாமே ! 

இது வேடிக்கைக்கு சொல்லவில்லை...

K.S. Radhakrishnan.
06-05-2018

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...