Tuesday, May 8, 2018

வரலாற்று நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது

இந்தியாவின் கம்பீரம், பாரம்பரியத்தின் அடையாளமான டெல்லி செங்கோட்டையை கூட பராமரிக்க இயலாத மத்திய அரசு வரலாற்றுச் சின்னங்கள் தத்தெடுப்பு திட்டத்தின்கீழ் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டது. இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் ஆட்சியின்போது, தில்லியிலுள்ள ஹுமாயூன் சமாதி, தாஜ் மஹால், ஜந்தர் மந்தர் உள்பட 5 வரலாற்று நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது போல தற்போது ஈடுபடுத்தப்பட்டதாக பதிலளிக்கின்றனர். 

அவர் தவறு செய்தார். இவர் தவறு செய்தார். நானும் செய்கிறேன் என்பதே இப்போது வாடிக்கையாகிவிட்டது. இதை நியாயமாக்கி மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது என்பது பைத்தியக்காரத்தனம்.

The Pioneer (2-5-2018)Delhi ed தி பயோனீர் இதழில் வெளியான,காங்கிரஸ் ஆட்சியின்போது வரலாற்று நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு பணி தனியாரிடம் வழங்கிய பட்டியல்.
MONUMENT
----------------------
Taj Mahal
Konark Sun Temples
Jaisalmer Fort
Jantar Mantar
Lodhi Tomb
Humayun's Tomb
Shaniwalwada
Gol Gumbaz
Lauriya Nandangarh
Krishna Temple , Hampi
Hidimba Devi Temple , Manali

இது குறித்து தி எக்கனாமிக் டைம்ஸில் (06/05/2018) வெளியான தாஸ் குப்தாவின் பதிவு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...