Thursday, September 8, 2022

*ஐநா மனித உரிமை ஆணையத்தில்:இந்த ஆண்டு செப்டம்பர் 2022கூட்டத்தொடரில்…. ஈழத்தமிழர் சிக்கல் குறித்து*



————————————
• ஈழத்தில் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெறாமல் இலங்கை தப்பியதுதான் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர், ஜெனீவாவில் 12-ந் தேதி தொடங்கும் நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
o இந்த சவால்களை சமாளிக்க அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
o ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு, கடுமையான பாதுகாப்பு சட்டங்களை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். 
o அமைதியான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. 
o ராணுவமயமாக்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும். 
o தண்டனையில் இருந்து தப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதுகாப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே வருகிற 12-ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிநாட்டு அமைப்புகள் விசாரணை நடத்துவதற்கான ஒரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. 
23-ந் தேதி இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அக்டோபர் 6-ந் தேதி, அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
UNHRC 2022 September meet- Srilanka Tamils issue- Eelam 
(Ph: *UNHRC preliminary report* )
#KSR post 
8-9-2022.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...