Sunday, September 18, 2022

*எனது தன்னிலை விளக்கம்* *நண்பர்களுக்கு, உற்றார்- உறவினர்களுக்கு….*

*எனது தன்னிலை விளக்கம்*
*நண்பர்களுக்கு, உற்றார்- உறவினர்களுக்கு….* 
————————————
சென்னையில்  ஒரு திரையரங்கில் சமீபத்தில்ன மதிமுக தலைவர் வைகோ அவர்களைப் பற்றிய ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
‘அந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?’ என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். இது குறித்து பல கை பேசி அழைப்புகள்…..
அவர்கள் கேட்பதிலும் அர்த்தமுள்ளது.
வைகோ அவர்களோடு தமிழக அரசியல், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம், ஈழம், பிரபாகரனோடு அவருக்கு தொடர்பு ஏற்பட என ஓர் இருபது ஆண்டுகள்  மேல் நான் பயணித்திருக்கிறேன். அவரோடு பயணித்த காலங்களில் அவருக்காக நான் பல பணிகளை ஆற்றியதும் உண்டு.
நாற்பது ஆண்டுகளுக்கு
முன் தமிழ் நாடு காங்கிரஸ்
(கா) TNKC திரு நெடுமாறன் அவர்களின் இயக்க சட்டமன்ற உறுப்பினர்கள் SINGLE PREFERENCE VOTE என  ஒரே வாக்காக திமுக வேட்பாளரான வைகோவுக்கு வாக்களிக்க  நான் எடுத்த நடவடிக்கைகள் யாவும் 
மறக்க முடியாது.அப்போது
மாநிலங்கள் அவைக்கு தலைமை செயலகத்தில் தேர்தல் நடந்தது. அப்போது கே. வி. தங்பாலு, ஜெயந்தி நடராஜன் வேட்பாளார்கள் என களத்தில்
இருந்தாக நினைவு.
அதே கால கட்டத்தில் நீயூயார்க்கில் டாக்டர் பஞ்சாட்சரம் ஈழ முதல் மாநாடு வைகோ செல்ல பின் புலமாக இருந்தேன்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோ ஈழத்துக்குச் சென்று வைகோ ரகசியமாகச் சந்தித்தது, அது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்றது, குடியரசுத்தலைவர் குருசாமி நாயக்கர் தூக்குத் தண்டனையை நீக்குவதற்கான கருணை மனுவை நிராகரித்தநிலையில், தூக்குத்தண்டனைக்கு எதிராக போராடியது என நிறைய அவருக்கான 
பணிகளைசொல்லிக் கொண்டே போகலாம். 
‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளாதது குறித்து பல நண்பர்கள் என்னைக் குறை கூறுவதாக நான் கேள்விப்பட்டேன். அந்த விழாவுக்கு எனக்கு முறையான அழைப்பு இல்லாதபோது நான் எப்படி அங்கே செல்வது? பல நண்பர்களும், உறவினர்களும் என்னிடம் ஏன் அந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று அக்கறையோடு கேட்கும் கேள்விக்கு இதுதான் என்னுடைய பதில். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 
வைகோ அவர்கள் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழா அழைப்பிதழை அனுப்பக் கூடிய நிலையில் இருந்திருந்தால், நிச்சயமாக எனக்கு அவர் அனுப்பியிருப்பார். ஆவணப்படத் தயாரிப்புக்குழு அழைப்பை அனுப்பியிருந்தால், அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில்,சிலநாட்களுக்கு முன் வைகோ அவர்களை  நக்கீரன் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி எடுக்க நடிகர் ராஜேஷ் வருகிறார். கடந்த 1982 – 1983 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அந்தப் பேட்டியில் பதிவு செய்ய அதற்கான விவரங்களைக் கேட்டு கைபேசியில் வைகோ என்னிடம் பேசியது உண்டு.  
அந்த ஆவணப்படத்தில் என்னைப் பற்றிய பதிவுகள் எவையும் இல்லையென்று சொன்னார்கள். என்னைப் பற்றிய பதிவுகள் இடம் பெறுவது குறித்து அதனைத் தயாரித்தவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து நான் கருத்து சொல்ல இயலாது.

கி.ரா. நூற்றாண்டு விழாவை வைகோ இடைசெவலில் நடத்த இருக்கிறார். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏற்பாடு செய்த கி.ரா. தொடர்பான பல நிகழ்ச்சிகளில் வைகோ கலந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக, கி.ரா.வின் 60 ஆவது பிறந்த நாள் மணிவிழா நிகழ்ச்சியினை 1982இல் எனது பங்களிப்புடன் கவிஞர் மீராவின் முயற்சியில் மதுரையில் நடந்தது. பின் 75 வது பிறந்தநாள் என….சென்னையில் கி.ரா.வின் 80 ஆவது பிறந்தநாள், 85 ஆவது பிறந்தநாள் விழாக்களை சென்னையில் நான் நடத்திய போதும் அதில் வைகோ பங்கேற்றது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. கி.ரா.வின் 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்வகையில் தினமணியும், டில்லி தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியிலும், புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் கி.ரா.வின் 95 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.கதைசொல்லி- கிராவின் நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் எல்லாம் வைகோ கலந்து கொண்டு பேசியது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இடைசெவலில் நடைபெறும் கி.ரா.நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்  
எந்தவிதத்திலும் இன்றைக்கும் வைகோ அவர்களை நான் மதிக்கின்றேன். 2001 - இல் கலைஞரோடு திமுக கூட்டணிவேண்டும் என்று சொன்னவனும் நான்தான். 2016 - இல் மக்கள் நலக் கூட்டணி ஏற்பட முன்பே, கலைஞரை வைகோ சந்திக்க வைத்ததும் நான்தான். எந்தவிதத்திலும் அவருக்கும் எனக்கும் உள்ள நட்பும் உறவும் இதுவரை குறைந்ததில்லை. இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கான முறையான அழைப்பு எனக்கு வரவில்லை என்பதால்தான், நான் அதில் கலந்து கொள்ளவில்லையே தவிர, வேறு காரணம் எதுவுமில்லை என்பதுதான் உண்மை.
 என் மேல் அக்கறையுள்ள நண்பர்களும், உற்றார் உறவினர்களும் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று  நம்புகிறேன்.
இவையெல்லாம் இன்றைக்கும் கல்கி ப்ரியன், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் என பல நண்பர்களுக்கு தெரியும்.
#KSR post 
18-9-2022.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...