Wednesday, September 28, 2022

*அண்ணா ஈழத்தமிழர் சிக்கல்*

*அண்ணா ஈழத்தமிழர் சிக்கல்*
மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து என்னிடம் பேசினார். தந்தை செல்வா காலத்தில் இருந்து ஈழ அரசியலில் பயணித்தவர்களில் நம்மிடையே இருப்பவர்களில், இவரும் ஒருவர். ஈழத்தில் சைவத்தைப் பாதுகாக்கும் வகையில் தனது பணிகளை மேற்கொண்டுள்ளார்.  
 பேசிக் கொண்டிருக்கும்போது மறவன்புலவு அவர்கள் 1961 – ஆம் ஆண்டு ஏப்ரல் 17 -இல் தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நான் விலங்கியல் பி.எஸ்சி சென்னை பச்சையப்பன்கல்லூரியில் படித்த காலம். அங்குதான் காசி ஆனந்தன் பி.ஏ.தமிழ் இலக்கியம் படித்தார். தந்தை செல்வாவின் சத்யாகிரகப் போராட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல, தமிழக முதலமைச்சர் காமராஜர், கீழ்ப்பாக்கம் கல்கி தோட்டத்தில் இருந்த ராஜாஜி, பேரறிஞர் அண்ணா ஆகியோரைச் சந்தித்தோம். அப்போது அண்ணா இதைக் குறித்து “சென்னையில் ஒரு கூட்டம் நடத்தி தமிழக மக்களிடம் பேசுவோம்” என்று உறுதியளித்தார். “திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெளியுலகத் தமிழர்களைக் குறித்தான பொறுப்பில் இருப்பவர் கே.ஏ.மதியழகன். அவரைச் சந்தித்துப் பேசுங்கள்” என்று அண்ணா கூறினார். மதியழகனைச் சந்தித்துப் பேசினோம்.
அப்போது தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் அதிகமான இலங்கை மாணவர்கள் படித்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு இலங்கை மாணவர்கள் அன்றைக்கு ரூ.1200 திரட்டி மதியழகன் அவர்களிடம் கொடுத்தார்கள். .  சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா வளாகத்தின் எதிரே உள்ள கடற்கரை மணலில் (அன்றைக்கு மெரினா கடற்கரையில் சீரணி அரங்கம் கட்டப்படவில்லை) மார்ச் 16 - ஆம் தேதி பெரும் மக்கள் திரள அண்ணா இலங்கைத் தமிழர் சிக்கலைப் பற்றி பேசியதை இன்றைக்கும் நினைத்துப் பார்க்கிறோம் என்று கூறினார்.  

#ksrpost
28-9-2022.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...