Wednesday, September 7, 2022

Justice K.T. Thomas நீதிபதி கே.டி.தாமஸ்

*

————————————
உச்ச நீதி மன்ற முன்னாள் கேரளாவைச் சார்ந்தவர். முல்லைப்பெரியாறு விஷயத்திலும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கையும் விசாரித்தவர். பிற்காலத்தில் ஓய்வு பெற்ற பின் முல்லைப் பெரியாறு அணை பலமாகதான் இருக்கின்றது என்று தமிழகத்திற்கு ஆதரவாக கருத்தைச் சொன்னார். அதேபோலவே தான் விசாரித்த ராஜீவ் படுகொலை சரியாக விசாரிக்கப்படவில்லை என்ற கருத்தைச் சொன்னார்.

கடந்த வாரம் இந்து கோவில்கள் பற்றியும் கருத்தை சொல்லியிருக்கிறார். ஒரு நேர்மையான மனிதர். நீதிபதி தாமஸை பற்றி நன்கு அறிவேன். அவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்துவிட்டு மாணவர் காங்கிரஸ்-கட்சியில் இருந்தவர்.அன்று கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் சி.கே.கோவிந்த நாயர். இவர் நேர்மையின் முகவரியாக திகழ்ந்தவர்.
மற்றும் காந்தியவாதி மன்மதன் இவருக்கு நெருக்கம். முதல்வராக இருந்த முகமது கோயா இவருக்கு நண்பர்.
நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்ட போது சில நாட்கள் தேர்தல் பணிகள் ஆற்றியதுண்டு.

பிறகு நிஜலிங்கப்பா காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ் கேரளாவில் முக்கிய பொறுப்பாற்றியவர். அன்றைக்கு சங்கரநாராயணன் பிற்காலத்தில் பம்பாய் கவர்னர் ஆனார். அவருடைய தலைமையில் அங்கே பணியை செய்தார். ஒருகட்டத்தில் கோட்டயம் தொகுதியில் காங்கிரஸில் நிற்பதற்கான சட்டமன்றத் தேர்தலில் மனு செய்திருந்தார்.

ஒய்.பி.சவான் போன்றவர்களை சந்தித்து ஆதரவு கேட்டபோது அவருக்கான வாய்ப்பு இருந்தபோது எம்.ஒ.மத்தாய் என்பவரால் அவருக்கு கிடைக்கவில்லை. தாரகேஷ்வரி சின்கா பற்றி நான் பதிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் நெருங்கியவர். அவருடன் தென் மாநிலங்களில் பிரயாணம் செய்தபோது கேரளாவிற்கு சென்றபோது அவருடைய ஆங்கிலப் பேச்சை நீதிபதி தாமஸ் தான் அன்றைக்கு வழக்கறிஞர் தாமஸ் தான் மொழிபெயர்ப்பு செய்தார். மொரார்ஜி தேசாய் கேரளா சுற்றுப்பயணத்தினுடைய பேச்சுக்கள் அத்தனையும் அவர்தான் எர்ணாகுளத்திலிருந்து கள்ளிக்கோட்டை வரை மொரார்ஜி கூட்டங்களில்      மலையாளத்தில் மொழிபெயர்த்ததெல்லாம் உண்டு.   ஜனதா-சிபிஎம் கூட்டணியில இவரை கோட்டயத்தில போட்டியிட இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சொன்ன போது வழக்கு மன்ற பணிகள் உள்ளன என மறுத்து விட்டார். அசோக் மேத்தா இவருக்கு நண்பர்.கடந்த காலத்தில் காங்கிரஸ் பின் ஸ்தாபன காங்கிரஸ்  என்ற நிலையில் கொச்சி எர்ணாகுளம் கோட்டயம் பகுதியில் அரசியல் பணிகளை செய்தவர்தான் கே.டி.தாமஸ். இதெல்லாம் கடந்த கால நினைவுகள்.

#KSR post 
7-9-2022

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...