Sunday, March 19, 2023

#மைசூர்மாநிலமுதல்வராகஇருந்த கேஅனுமந்தையா #மாநிலசுயாட்சி #ராஜாஜி #காவிரி



—————————————
இந்த அரிய படம் மைசூர் மாநில முதல்வராக இருந்த கே.அனுமந்தையா சென்னை வாகினி ஸ்டுடியோவுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம். உடன் பி.நாகிரெட்டி உள்ளார்.

கே.அனுமந்தையா மூதறிஞர் ராஜாஜியின் சிஷ்யர். ஒருமுறை காவிரி தண்ணீரைக் கர்நாடகம் வழங்கவில்லை. அன்றைக்கு சென்னை ராஜதானி முதல்வராக இருந்த ராஜாஜி, டெல்லியில் அனுமந்தையாவைச் சந்தித்தபோது, அனுமந்தையாவைப் பார்த்து, “நீ என் சிஷ்யனா? காவிரியில் தண்ணீர் விட மாட்டேங்கிற...?” என்று உரிமையோடு கடிந்து கொண்டதோடு, செல்லமாக “படுவா ராஸ்கல், நீ தண்ணீர் விடு. இல்லையென்றால் நான் வந்து அணையை உடைத்து தண்ணீர் விடுவேன்” என்று சொன்ன நிகழ்வுகள் எல்லாம் உண்டு.  
 
பெங்களூருவில் அமைந்துள்ள இன்றைய கர்நாடக சட்டமன்ற கட்டடத்தைக் கட்டத் திட்டமிட்டவர் அனுமந்தையாதான்.
அரசியலமைப்பு நிர்ணய அவையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மட்டுமல்ல, சுயராஜ்யத்தையும் வழங்குவது நல்லது என்று வாதங்களை எடுத்து வைத்தவர் அனுமந்தையா.
நேரு தனது கடைசி காலத்தில், நிர்வாகக் குழு (அட்மினிஸ்ட்ரேட்டவ் கமிட்டி) அறிக்கை வழங்க மொரார்ஜி தேசாய் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். நேரு இறந்த பின் சாஸ்திரி பிரதமரான போது அந்த குழுவுக்கு தலைவராக அனுமந்தையா நியமிக்கப்பட்டார். அந்நிர்வாகக் குழுவின் அறிக்கையின் பல தொகுதிகளில் மத்திய மாநில, உறவுகள், அதிகாரப் பகிர்வீடுகள் பற்றி எல்லாம் கூறும் ஒரு தொகுதியைத் தந்தவர் அனுமந்தையா. தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் நாட்டின் விடுதலைக்கு முன் மாகான சுயாட்சி என தமிழில் எழுதியுள்ளார். இவையெல்லாம் ராஜமன்னார் கமிஷனின் மாநில சுயாட்சிக்கு முன் நடந்தவை.

Picture-In 1953, The Chief  Minister of Mysore K Hanumantayya visited Vauhini Studio in Madras. Seen below along with him are B N Reddy and B Nagi Reddy

#மைசூர்_மாநில_முதல்வர்_கேஅனுமந்தையா 
#மாநில_சுயாட்சி 
#ராஜாஜி 
#காவிரி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்.இராதாகிருஷ்ணன்
#KSR_Post
19-3-2023.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...