Monday, March 6, 2023

கீழடி…

வழக்கு தொடர்ந்து உரிய ஆணைகளை பெற்று #கீழடி என் தாய்மடி என உலகத்தமிழர்களைக் கூற வைத்த சகோதரி வழக்கறிஞர் @kanimozhimathi  இன்றைய கீழடி நிகழ்வுக்கு நன்றியோடு திமுக அரசால் அழைக்கப்பட்டரா?
***** .‌கே.என் தீட்சித் போன்ற தொல்லியல் அறிஞர்கள் 1939 இல் ஊகித்துச் சொன்னது தான். ஆனாலும் அதை யாரும் முன்னெடுத்துச் செல்லவில்லை. 

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது பண்டைத் தமிழ்ச் சமூகம் நூலின் 165 வது பக்கத்தில் ஒரு செய்தி உள்ளது. 
இப்பக்கத்தில் தொல்லியலாளர் இரா. நாகசாமி எழுதிய கட்டுரை ஒன்றை கா. சிவத்தம்பி மேற்கோள் காட்டியுள்ளார்.
(1970 இல் Archaeology and Epigraphy - A Survey  3வது உலகத்தமிழ் மாநாட்டு கருத்தரங்கில் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டதாக அடிக்குறிப்பு மூலம் தெரிகிறது.)  மேற்கோள் காட்டப்பட்ட  கட்டுரையில்  தற்போதுள்ள மதுரை நகரத்தின் அருகே பழைய மதுரை இருந்திருக்க  வாய்ப்பில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.   அன்றைய தேதியில் இருந்த கள ஆய்வுத் தகவல்களின்படி  இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

ஆய்வுகள் ஒரு தொடர் நிகழ்வு. 
உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. சர் ஜான் மார்ஷல்கள் அவ்வப்போது தோன்றி விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பைத்தான் அமர்நாத் கீழடியில் மேலும் தோண்ட எதுவும் இல்லை என்று தீர்மானமாகச் சொன்னார்கள் சில "தொல்லியலாளர்கள்" ( !)  விஷயம் நீதிமன்றம் வரை சென்றது. இப்போது எட்டாவது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது. புதிய தரவுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. 

கார்த்திகேசு சிவத்தம்பி தனது நூலில் மேற்கோள் காட்டியுள்ள  கருத்து

வைகை தாமிரபரணி பகுதியில் விடாமல் தோண்டவேண்டும் தொடர்ந்து.

தரவுகளால் கட்டமைக்கப்பட்ட வரலாறு நமக்கான உரிமை.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...