Sunday, March 19, 2023

#கல்மண்டபங்கள்

#கல்மண்டபங்கள் 
———————————
இம்மாதிரி கல்மண்டபங்கள், சத்திரங்கள், சுமைதாங்கிகளை தமிழகம் மட்டுமல்ல, கேரளம், ஆந்திரம், கர்நாடக எல்லைகள் வரை இன்றைக்கு அழிவுநிலையில் பார்க்க முடிகிறது.  
 
முற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல், கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் மக்கள் பயணித்தனர். இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது காடுகளில் உள்ள விலங்களிடம் பயணிகள் சிக்கிவிடுவார்கள் என்பதற்காகவே, அவர்களுடைய பாதுகாப்புக்காகவே இம்மாதிரி கல்மண்டபங்கள் கட்டப்பட்டன. 







சாலையில் பயணிப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் தருவது, இரவாகிவிட்டால் அவர்கள் தங்குவதற்கு என பல இடங்களில் உறுதியான கட்டுமானமாக நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இம்மாதிரி கல்மண்டபங்கள் கட்டப்பட்டன. இவ்வளவு காலங்கள் தாண்டியும்  இந்த கல்மண்படங்கள் பலமாக இருக்கின்றன.
 சரியாகப் பராமரிப்பு இல்லாததால் சில இடங்களில் உள்ள மண்டபங்களில் விழந்து சேதாரங்கள் உள்ளன. குப்பைகள், தூசிகள், சமூக விரோதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றாலும் பாதிப்பு உள்ளது. 


இந்த மண்டபங்களைப் புனரமைக்க வேண்டும். சில மண்டபங்கள் சிற்பங்கள், அழகிய கல் தூண்கள் கொண்டவையாக உள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு கட்டிய கட்டடங்கள் பாளம்பாளமாக பிளந்து இடியும் நிலையில் உள்ளன. சில 100 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்மண்டபங்களோ இன்றைக்கும் கம்பீரமாக மிடுக்காக இருப்பதை பார்க்கும்போது அன்றைய ஆட்சியாளர்களின் நேர்மை, மக்கள் நலப்பணி ஆகியவை மிகையில்லாமல் தென்படுகின்றன.

இதுமட்டுமா? மங்கம்மாள் இணைப்புச்சாலை, ஏரிகள், குளங்கள் வெட்டி அறிவியல்பூர்வமாக மதகுகள், கலிங்கல்கள் அமைத்தல், சாலை ஓரங்களில் வேம்பு, புளிய மரங்களை வைத்தல், சில இடங்களில் நாவல் மரங்களை வைத்தல், அரச மரங்கள், ஆலமரங்களை வைத்து அதன் அருகே ஒவ்வொரு கிராமத்திலும் கிராமவாசிகள் அமரக் கூடிய வகையில் மேடை கட்டுதல் இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. வரலாற்றில் இவற்றையெல்லாம் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.  
 
ஜனநாயம் பேசிக் கொண்டு மக்களாட்சி என்று சொல்கிற இன்றைய காலத்தில் கட்டுகிற கட்டடங்கள் கூட இந்த அளவுக்கு உறுதியாக இல்லை. இடிந்து விழுகிறது. ஆயிரம் கதைகள், நியாயங்கள் பேசுகிறோம்.
 
மன்னராட்சி காலத்தில் நீதி கேட்ட கண்ணகிக்கு தன் உயிரையே துறந்தார் பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன். நீர்ப்பாசனத் திட்டங்களைச் செம்மைப்படுத்திய சோழ அரசர்களும், பாண்டிய அரசர்களும் இன்றைக்கு உள்ள வியாபார அரசியலை விட ஆயிரம் மடங்கு போற்றக் கூடிய அரசர்களாகவே முடியாட்சி காலத்திலேயே இருந்தார்கள். இதை மறுக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. பண்டைய அரசுகளால்‌ கட்டப்பட்ட கல்மண்டபங்களையாவது இடிந்து போகாமல் அரசு பாதுகாக்க வேண்டும்.

#போஸ்ட்கல்மண்டபங்கள்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#KSR_Post
19-3-2023.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...