Tuesday, April 11, 2023

கழுகுமலை வெட்டுவான்கோவில்-தமிழர் பண்பாடு, கலாசாரத்தின் ஓர் அருமையான அடையாளமாகும்.

#கழுகுமலை
வெட்டுவான்கோவில்
—————————————
 கழுகுமலை வெட்டுவான் கோவில் தமிழர் பண்பாடு, கலாசாரத்தின் ஓர் அருமையான அடையாளமாகும். அதனுடைய தன்மைக்கேற்றவாறு இன்னும் தமிழ்நாடு அதைத் கொண்டாடவில்லையே என்ற கவலையும் உண்டு. 2000 என்று நினைக்கிறேன். வாஜ்பாய் காலத்தில், மத்திய அரசிடமிருந்து கழுகுமலைக்கும், ஆந்திராவில் உள்ள போச்சம்பள்ளிக்கும் ஒரு கோடி நிதி கிடைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு, அந்த தொகுப்பு நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்தது. 















வெட்டுவான் கோயில் குறித்த இந்தப் பதிவு, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்‌ந்த திரு.வேலுப்பிள்ளையால் இடப்பட்டது. அது என் கவனத்தை ஈர்த்தது. அது வருமாறு:

கழுகுமலையின்,
கண்கவர் காரிகைகள் !

முதலிருப்பவள்,,,!
இப்போதுதான்,,, நீராடி வந்திருக்கிறாள்,,,?
விரித்த கூந்தலை,,வாரி எடுத்து,,
தலை பின்ன நினைக்கிறாள்,,!

அரைமலைக் காரியின்,,
அரைத் துணி நழுவுகிறதோ ?
அவளின் அவன் ,,,!அவளெதிரில் வருகின்றானோ ?




இரண்டாவதிருப்பவள் ,,,!
அவள் பிந்தி வந்தாலும்,,,?
எப்பொழுதும் முந்திக் கொள்வாள் !
முந்தானைச் சரித்துக் கொள்வாள் !

பின்னலிட்ட கூந்தலிலே,,
கன்னமிட வைக்கும் அழகோடு,,
அவள் முகந் திருத்திக் கொள்வாள்,,, !

யாழி முகங்காட்டி மிரட்டினாலும்,,,?
யானை முகங்காட்டி வெருட்டினாலும்,,,?
என்னவன் இருக்க,,எனக்கென்ன கவலை ? என்பாள் !

இருவரும்,,
ஒரு வீட்டில் தான்,,,
தனித் தனி அறைகளில் தான்,,,,

அவன்,,,!
வந்து விட்டான் !

இனியென்ன ?
காஞ்சி இருக்க கலிங்கம் கலைந்த கதை தானோ ?

இக்காரிகையர் இருக்குமிடம்,,, !
வெட்டுவான் கோவில்,,
அரை மலைக் கோட்டம்,,,
கழுகுமலை,

ஒற்றைத் தலை !
இரட்டை உடல் !
இரண்டு கைகள் ?
ஒற்றைக் கைத்தடி,,,,,,,,,,,
இப்படித்தான் இருக்கிறது,,,,,?
இந்த தேசமும்,,,
இந்த தேசத்தின் மனிதர்களும்,,,

தேசம்,,
எங்கள் தேசம்,,,
வாழ்க வளநாடு ?

கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவில்…

அம்மா !
தாயீ,,,,,,,,,,,,,,,,தர்ம தேவி !
நீ நிற்கிற தோரணை,,
உன் பக்கத்துல நிக்கிற சிம்மத்தின் அழகு !
சிம்மத்தின் அருகே வித்யாதரர்கள் !
எல்லாம் சரி தானம்மா,,,

உன் வலப்பக்கம் 
ஆடுகிறவன் ! யாரம்மா ?
அவனாடுகிறானா ?
ஆட்டுவிக்கிறானா ?
அவன் ஆடல் பார்ப்பதற்கோ ?
இத்தனை ஒயிலாய் நிற்கின்றாய் ?

ஆனாலும்,,
உன் வலக்கையூன்ற,,,,,
இந்த பிள்ளைதான் கிடைத்தானா ? தாயீ,,,,,,,,,,,,,,,,,,

#கழுகுமலை
#கழுகுமலை_வெட்டுவான்கோவில்
#kalagumalai
#vettuvan_kovil
#தமிழர்_பண்பாடு_கலாசாரத்தின்_ஓர்_அருமையான_அடையாளமாகும். 
#Tamil_Culture

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #K_S_Radhakrishnan, #கேஎஸ்ஆர்,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்,

#KSR_Post
11-4-2023.


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...