Saturday, April 15, 2023

ஓவிய கலைஞர் கோவில்பட்டி கொண்டையராஜீ …




ஓவியக்கலையில் மிகவும் புகழ் பெற்றவர்கள் ஒரு சில ஓவியர்கள் தான் அவர்களில்  குறிப்பாக முதலில் ஓவியர் ரவிவர்மா…. கோவில்பட்டிஓவியர்.சி.கொண்டைய ராஜுவும் என சிலர் உண்டு.

ஓவியர் கொண்டையராஜு கோவில்பட்டியில் வாழ்ந்து புகழ் பெற்று நமக்கெல்லாம் ஓவியக்கலை மூலம் பெருமை பெற்று தந்தவர் 



சென்னையில் வைத்தியர் குப்புசாமி ராஜு மற்றும் அலமேலு மங்கம்மாள் அவர்களுக்கும் 1899ஆம் ஆம் ஆண்டு ஏக புதல்வனாக பிறந்தார்..




 இளம் வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் சென்னை மயிலாப்பூரில் அவருடைய நெருங்கிய உறவினரும் சிறந்த ஓவியரும் புகைப்பட வல்லுநருமான  ரங்கையா ராஜு பராமரிப்பில் வளர்ந்து வந்தார்..







1915 ஆம் ஆண்டு சென்னை அரசினர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து 1918 ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்..




 ஓவியக்கலையை சிறப்புற கற்றார் திரைச்சீலை ஓவியம் , ஆயில் பெயிண்டிங் மற்றும் புகைப்பட கலையிலும் வல்லுனராக விளங்கினார்..

 எனவே 1920 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியிடம் சீடராக சேர்ந்து பிரம்மச்சரியம் ஏற்று துறவற வாழ்க்கை வாழ்ந்தார்..

 அப்போதுதான் அவர் வாழ்வில் திருப்புமுறை ஒன்று ஏற்பட்டது..

 ஒரு சமயம் ரமண மகரிஷியின் படம் ஒன்றை பெரிய அளவில் ஒரு அன்பர் வரைந்து கொண்டு வந்தார்*

 அந்த ஓவியம் சரிவர வரையப்படாததால் ராமணர் கருத்துக்கு இணங்கவும் சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும்

 ஓவியமணி கொண்டைய ராஜு அவர்கள் அதன் குறைபாட்டை நீக்கி சிறப்பாக திருத்தித் தரவே அதனை கண்ட ரமண மகரிஷி வியந்தார்.

எனவே இனி இந்த இந்த ஆசிரமத்தை வெட்டு வெளியேறுவாயாக என்று அன்பு கட்டளை இட்டு ஆசி கூறி அனுப்பினார்..

 அடுத்தபடியாக டி.டி சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை ஒரிஜினல் ஸ்ரீ மீனலோஜினி பால சற்குண சபாவில் அதன் உரிமையாளர் டி.என் பழனியா பிள்ளை ஆதரவில் திரை ஓவியராக சேர்ந்தார்..

 இந்த நாடக குழு தமிழக மட்டுமல்லாது கேரளம், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் சிறப்புடன் நடந்தது..

 எங்கும் அவருடைய திரை ஓவியங்களுக்கும் நாடகத்தில் உள்ள மற்ற பணிகளுக்கும் பெரும் புகழ் கிடைத்தது..

 நாடகக் கம்பெனியில் வரும் சீன்கள்  மட்டுமல்லாது மேக்கப் உடை அலங்காரம் தந்திரக் காட்சிகள் போன்றவற்றிற்கு ஆர்ட் டைரக்டர் ஆகும் பணி புரிந்ததால்  பெரும் பெயர் பெற்றார்..கொண்டையராஜீ.

 இந்தியாவில் காலண்டருக்கு என்று கருப்பொருளாக இறைவனது திருவுருவங்களையும் பல புராணச் சம்பவங்களையும் ஓவியங்களாக வரைந்து வெளியுலகிற்கு கொண்டு வந்ததிலும் இந்திய காலண்டர் படங்களுக்கு வடிவம் தந்ததிலும் முதல் இடம் பெற்றவர் ராஜா ரவிவர்மா..

 மும்பையில் சொந்தமாகவே வண்ண அச்சு கூடம் அமைத்து தனது ஓவியங்களை அச்சிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தவர் ..

அதே நேரத்தில் காலண்டர் அதிகம் வரைந்த புகழ் பெற்றவர் கொண்டைய ராஜு.

 காலண்டர் படங்கள் அச்சிட்டு உற்பத்தி செய்யும் இடம் சிவகாசி.. காலண்டர் படங்களுக்கு தேவையான கடவுள் படங்களை வரைந்த ஓவியர்கள் அனைவரும் கொண்டை ராஜுவின் சிஷ்யர்கள்..

 இவர்கள் அனைவரும் கோவில்பட்டியை சார்ந்தவர்கள்.. அதுவரை தீப்பட்டி சப்ளை செய்து கொண்டிருந்த இந்தியாவில் சிவகாசியில்
தொடர்ச்சியாக தீப்பெட்டி தொழிற்சாலை வருகிறது..

 அச்சு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன அச்சு இயந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்..இதன்மூலமாகத்தான்..

இங்கிருந்து தான் இந்தியா முழுமைக்கும் கடவுள் புராண படங்கள் கொண்டையராஜீ மூலம் வீடுகளுக்கு தெய்வங்கள் கொண்டு சேர்க்க படுகிறது..

 இலங்கைக்கு பல்வேறு நாடுகளில் நாடக கலையை மேம்படுத்துவதிலும் திரைச்சீலைகள் அமைப்பதிலும் ஓவிய மணி.கொண்டைய ராஜா அவர்களுடைய பங்கு அளப்பரியது..

 அதே நேரத்தில் இரண்டாவது உலக மகா யுத்தம் தோன்றிய பிறகு
அங்கிருந்து கப்பலில்  திரிகோணமலையிலிருந்து  கிளம்பி மதுரையை வந்து அடைகிறார்கள்..

 பின்னர் மதுரையில் பாய்ஸ் கம்பெனி நொடித்துப் போய்விட்ட காரணத்தால் மீண்டும் அவர்கள் கோவில்பட்டியில் வந்து செட்டில் ஆகி விடுகிறார்கள்...

இந்தியா முழுவதற்கும் சிவகாசியில் லித்தோ பிரஸ் வந்த காலகட்டத்தில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்து இந்தியா முழுவதுக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்..

இதில் இவருடைய  பிரதான சீடர்களாக டி எஸ் சுப்பையா, டி.எஸ். மீனாட்சி சுந்தரம் மு.ராமலிங்கம் இவர்கள் மூவருமே இவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்..

 மேலும் இவர் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டவர் எனவே இவரின் சிஷ்யர்களின் குடும்பத்தினரையே பேரன்பேத்திகள் என்று ஒரே குடும்பமாக கோவில்பட்டியில் வாழ்ந்து வந்தார்.
  
ஓவிய மணி  கொண்டைய ராஜு அவர்களுக்கு 60-வது மணிவிழா 5. 11. 1958 சீடர்களால் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

 1965 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்..

 அப்பொழுது நாத்திகனாக இருந்த என்னை பக்தி வழியில் திருப்பியது கொண்டைய ராஜு அவர்களின் ஓவியங்கள் தான் என்று கூறி பாராட்டினார் ..

வண்ண அச்சகத்திற்கு முதன்முதலாக படங்கள் வரைந்து கொடுத்த பெருமை இவரையே சாரும் கலைஞர்கள் வாழ்க்கை என்றால் சோதனைகளும் துன்பமும் நிறைந்தது என்பது முன்னோர் வாக்கு...

 இது ஓவியர் கொண்டைய ராஜீ அவர்களையும் விடவில்லை.. ஓவியர் அவர்கள் திருமண ஆகாத பிரம்மச்சரியம் ஏற்றவர்..
என்றாலும் அவரை நம்பி வாழ்ந்தவர்கள் பலர் இருந்தனர் ..

 தன்னை நம்பியவர்களை ஏமாற்றாத 
 நன்றியும் ஈகை குணமும் கொண்ட பண்பாளர்.

 தனக்கு கிடைத்ததை மற்றவர்களுக்கு செலவு செய்து விட்டு எப்பொழுதும் எளிமையாகவே இருப்பார்..

 சாதாரண நான்கு முழம் வேட்டியும் சட்டையும் தவிர எவ்வித ஆடம்பரம் இல்லாத இருப்பார்..

 நாய்கள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். எனவே உயர்ந்த ஜாதி நாய்கள் நிறைய வளர்ந்தார்..

 எளிய முறையில் பேசவும் பழகவும் செய்வார். குழந்தை உள்ளம் கொண்ட அவருடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் சற்று வித்தியாசமாக இருக்கும் அவரிடம் சீடர்கள் அனைவரும் குருகுல முறையில் ஓவியம் பயின்றதால் அவர் மீது அதிக பாசம் கொண்டு இருந்தனர்..

அவரும் சீடர்களை எல்லாம் தன் பிள்ளைகளாகவே பாவித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து மருமகள் பேரன் பேத்தியுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்தார் கலை குடும்பங்களின் தலைவராக அவர் இருந்தார்..

எனவே அவருக்கு சீடர்களே இறுதிக்கடமைகளை அனைத்தையும்  செய்தனர்..

 பல பாராட்டுக்களுக்கும் சிறப்புகளும் பெற்ற இவர் 27.7. 1976 அன்று கோவில்பட்டியில் காலமானார்..

 கோவில்பட்டியில்  கொண்டைய ராஜீ மறைவுக்கு கலை உலகமே அஞ்சலி செலுத்தியது..

நினைவு கூறும் வகையில் 2005 ஆம் ஆண்டு நேஷனல் சென்டர் ஆர்ட்ஸ் நியூ டெல்லி மற்றும் இத்தாலியன் எம்பஸி கல்ச்சுரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூ டெல்லி ஆகிய மத்திய அரசு சார்ந்த அமைப்புகள் கூட்டாக நடத்திய ஆய்வின்படி இந்தியாவிலேயே முதன் முதலில் லித்தோவுக்கு படங்கள் வரைந்து தந்தவர்கள் கேரளாவை சேர்ந்த ஓவிய ரவிவர்மாவும் கோவில்பட்டி கொண்டைய ராஜீவும் தான் என்று  முடிவு செய்து இவ்விரு பெரும் கலைஞர்களின் ஓவியங்களையும் வாழ்க்கை வரலாற்றையும் லித்தோகிராபி என்ற தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சி நடத்தி சிறப்பித்தது..

 *இந்த உலக கலை தினத்தில் அன்னார் கொண்டையராஜீ அவர்களின் நினைவை போற்றுவோம்*
இன்றைக்கும் கோவில்பட்டி மாதன் கோவில் சாலை வழியாக மேட்டுக்கு செல்லும் போது இவரின் நினைவுகள் வரும்.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...