Wednesday, April 26, 2023

கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை

கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை 
—————————————
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 21.04.2023 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழகம் நிம்மதியாக, அமைதியாக இருக்கிறது என்று தானே புகழ்பாடிக் கொண்டார். அது குறித்த எனது சமூக தளங்கள் பதிவில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நிகழ்ந்தன, கொலைகள் என்று விரிவாக பட்டியல் இட்டிருந்தேன். 
 
நேற்று கிராம அதிகாரி லூர்து படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். லூர்து குடும்பத்திற்கு அரசுப் பணி மற்றும் ரூ.1 கோடி நிவாரணம்  என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சற்று ஆறுதல் தரும் விடயம்தான்.  இந்த மாதிரி நிவாரண நிதி இதுவரை பொதுவாக பல சம்பவங்களில் 25 -50 லட்சத்துக்கும் மேல் தாண்டாது. இங்கே surprising ஆக ரூ.1 கோடி லூர்து குடும்பத்துக்கு கொடுத்தது சரிதான். மறுக்கவில்லை. அதே சமயம்,  வேறு காரணங்களுக்காக ரூ.1 கோடி கொடுத்திருந்தால்  இதய சுத்தியோடு அதை வரவேற்கவும் முடியாது.

1. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் வெற்றி பெற வேண்டும்.
2 ஜி ஸ்கொயர் ரெய்டு, 12 மணி நேரம் வேலை தொழிலாளர் சட்டத் திருத்தம்,  மதுபானம் தொடர்பான அரசு அறிவிப்பு போன்றவற்றால் அவப் பெயர் வந்துவிட்டதே என்ற அச்சத்தின் காரணமாக இந்த நிதி வழங்கப்பட்டது என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது. அதை பலருடைய முக நூல் பதிவிலும் பார்க்க முடிகிறது. 

அப்படி என்றால் நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்து உண்மையாகவே படுகொலைக்காகவா? தங்களின் சுயநல விருப்பத்துக்காகவா என்ற வினாக்கள் எழுகின்றன. என்றபோதிலும் லூர்து குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளித்ததும் ஏற்புடையதுதான்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-4-2023.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...