Thursday, April 27, 2023

முதல்வர் ஸ்டாலின் திடீரென்று இவ்வளவு ஆர்வமாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க செல்வதின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்திக்க இன்றைக்கு டெல்லிக்கு செல்ல உள்ளார். சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள வளாகத்தைத் திறக்க குடியரசுத் தலைவரை அழைக்கச் செல்வதாகத் தகவல். 

சரி. 
 குடியரசுத் தலைவர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பிறகு முதல் தடவையாக  தமிழகம் வந்தபோது அவரை வரவேற்கக் கூட முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. பிரசிடென்ஸ் மினிஸ்டர் ஃபார் வெயிட்டிங்கிற்குக் (President's waiting for ministers) கூட ஜூனியர் அமைச்சர்தான் அனுப்பி வைக்கப்பட்டார். 
 முதல்வர் திடீரென்று இவ்வளவு ஆர்வமாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க செல்வதின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. 

ஒரு பக்கம் ஜி ஸ்கொயர் ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏதோ நடக்கின்றது, நடக்கட்டும். 
 
அதோடு இன்று ஒரு முக்கிய திமுக தலைவர் என்னிடம் பேசும்போது, என்னுடைய இடைநீக்கம் குறித்து கூட கட்சித் தலைவருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் சரியான தெரிதல் வரவில்லை என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதனால்தான் விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸும், என்னை நீக்கம் குறித்தான அறிவிக்கையும் எனக்கு வரவில்லை என்று எனக்குப்பட்டது. எது நடந்தால் என்ன? நம் பணி நமக்கு.

" பூனைகளை விட
    புலிகள் வலிமையானவை
    என்பதை
    எலிகள் எப்போதும்
    ஏற்றுக்கொள்வதே
    இல்லை. " 
-புதுமைப்பித்தனின் சொற்கள் நினைவுக்கு வந்தது. வாழ்க தமிழகம்…வாழிய வாழிய வாழியவே…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-4-2023.


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...