Friday, April 28, 2023

மணல் மாபியாக்களால் தமிழகத்தில் நடந்த கோரச் சம்பவங்கள்-

லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு முன் மணல் மாபியாக்களால்   தமிழகத்தில் நடந்த கோரச் சம்பவங்கள்-

தமிழகத்தில் மணல் கடத்தல் என்பது அரசிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தருவதால்,ஆளுங்கட்சி,எதிர் கட்சியினர்,அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மேலும் வருவாய்த்துறை,காவல்துறை உதவியுடன், அரசியல் ஆதரவுடனே அவை நடந்தேறுகின்றன.

 தற்போதைய ஆட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர்,"கரூரில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற 10த்தே நிமிடங்களில் மணல் அள்ளலாம் என்றும்,அதிகாரிகள் குறுக்கிட்டால்,அவர்கள் அங்கே வேலையிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்" என்றும் பகிரங்கமாக அறிவிக்க முடியும் சூழலே தமிழகத்தில் உள்ளது.

லூர்து பிரான்சிஸ் படுகொலையை ஒட்டி தூத்துக்குடி பகுதியில் நிகழும் மற்ற மணல் திருட்டு விசயங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

முறப்பநாடு பகுதிக்கு அருகிலுள்ள அகரம் பகுதியிலுள்ள விவசாயி பாலகிருஷ்ணன் அவர்கள்,நீதிமன்ற உத்தரவு பெற்று, ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் போது துப்பாக்கியுடன் உள்ள காவலர்கள் பாதுகாப்புடன் செல்லும் சூழல் உள்ளது. 
காரணம்-

அந்த ப்பகுதியில் நிலவும் மணல் கொள்ளை குறித்து பொதுவெளியில் தொடர்ந்து அவர் பேசி வருவதால் மணல் மாபியாக்கள் அவரை அச்சுறுத்தி வருகின்றனர். அவர் காவல்துறையிடம்("உண்மை மட்டுமே வெல்லும்"-காவல்துறையின் வாசகம்!) மணல்கொள்ளை குறித்து புகார் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால்,அவர் நீதிமன்றம்(மதுரை-உயர்நீதிமன்றக் கிளை)சென்று மனு செய்ததால்,அதை விசாரித்த நீதிமன்றம்,அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

 ஆக,
உண்மையை சொன்னால், 100 கி.மீ.அப்பால் உள்ள நீதிமன்றம் சென்று நிவாரணம் பெறும் சூழல் தான் தமிழகத்தில் உள்ளது.(அதற்குள் அவர் உயிர் பறிக்கப்பட்டால்?!)

 "வாய்மையே வெல்லும்"!-

இது குறித்து பாலகிருஷ்ணன் கூறும்போது,"சட்டவிரோதமாக,நடைபெறும் மணல் கொள்ளையில் ஒரு லாரி மணல் மூலம் 25,000-30,000 பணம் கிடைப்பதால்,அதைக் கொண்டு மணல் மாபியாக்கள்,வருவாய்த்துறை,காவல்துறைஅரசியல்வாதிகள் ஆதரவுடன், சட்டத்தை துளியும் மதிக்காமல்,இக்கொள்ளையை நடத்தி வருகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொங்காரயக்குறிச்சி-தாமிரபரணி கரையில் உள்ள கிராமம். அங்கேயும் ஆதிக்க சாதியினர் மணல்கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டபோது,அங்குள்ள ஓய்வுபெற்ற தலைமை-ஆசிரியர் தேவசகாயம் அவர்கள் உள்ளூர் மக்களின் துணையோடு,எதிர்த்ததால்,2014ல் அவர் மணல் மாபியாவால் கொலை செய்யப்பட்டார். அதை பழிதீர்க்க,2015ல் பிச்சையா தேவர் என்பவரும் கொல்லப்பட்டார்.

மணல் மாபியா குறித்து ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"அரசியல்வாதிகள் ஆதரவுன் மணல்கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள் 1 வருட காலத்திலேயே பெரும் பணம் சட்டவிரோதமாக சம்பாதித்து,அப்பணம் மூலம்,ஏரியாக்களில்நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் அதிபர்களாகி விடுவதால்,செல்வாக்கு பெற்றவர்களாக மாறி, அரசியல்வாதி+வருவாய்துறையினரின் ஆதரவு பெற்று,அவர்கள் மீது நான் சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததால் என்னை அரசியல்வாதிகள் உதவியுடன் வேறு இடத்திற்கு மாற்றினர்"என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

2018ல் திருநெல்வேலி நாங்குநேரியில் உள்ள நம்பியாற்றில் சட்டவிரோதமாக மணல் மாபியாக்கள் மண் கடத்தியபோது,அதை தட்டிக்கேட்ட ஜெகதீஷ்துரை எனும் காவலர்,சக காவலர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு,படுகொலை செய்யப்பட்டபோது,உதவாமல்("வாய்மையே வெல்லும்")அவர் படுகொலைக்கு காவல்துறையினரே காரணமாக இருந்து,அதற்கு துணைபோயுள்ளனர்.

நம்பியார் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையின் போது கொல்லப்பட்டவர்கள்-

கண்ணநல்லூர் தாஸ்-2,000,

மிட்டாதார்குளம் குமார்-2,012,

கருங்குளம் செல்லப்பா-2,017,

பெருங்குளம் வியாகப்பன்-2,018-

வருடங்களில் மணல் மாபியாக்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

25 வருடங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் குவாரி கொள்ளையர்களால் கொல்ல (லாரி ஏற்றி)முற்பட்ட போது மயிரிழையில் உயிர் தப்பினார்.அச்சமயம் லாரி ஓட்டுநர் மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டது.

2004 டிசம்பரில் செங்கல்பட்டில் உதவி தாசில்தார் ஒருவர் மணல் மாபியாக்களால் கொல்லப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்றமும்,பதேசிய பதுமை தீர்ப்பாயமும் மணல்கொள்ளை வழக்கில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. (தற்போதும்,2 வழக்குகள் மணல்கொள்ளை தொடர்பாக நடந்து வருகிறது-இராமநாதபுரம் மாவட்டத்தில்,சிர்கம்பையூர் பகுதியில் உள்ள பாம்பார் ஆற்றில் நடந்து வரும் மணல்கொள்ளை-
பட்டுக்கோட்டை,ஏரிபுறக்கரை கிராமத்தில் நடந்து வரும் மணல் கொள்ளை-)

2013ம் ஆண்டு காஞ்சிபுர ஆட்சியரே சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மணல்கொள்ளையை தடுக்கத் தவறியதால்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு ஆற்றுமணலுக்கு மாற்றாக M-sandஐ உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துவதோடு,அதன் தரத்தையும் உறுதிசெய்ய வேண்டும்.

ஆற்றுமணலை காப்பத்தில் அரசு மனஉறுதியுடன் செயல்பட்டு,அதை காக்க நினைக்கும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் வந்தால்,உடனே தகுந்த செயலூக்க(Proactive)நடவடிக்கைகளை மேற்கொண்டு,அதையும் தாண்டி கொலை நிகழ்ந்தால் இரும்புக்கரம் கொண்டு,விரைந்து தக்க தண்டனை பெற்றுத் தருவதை உறுதிபடுத்த வேண்டும்.

டிரோன்களும்,CCTV கேமராக்களும்,ஆற்றின் எல்லையை தெளிவாக வரையறுத்து பாதுகாத்தலும்,முறையான கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டால்,மணல் திருட்டை ஓரளவிற்காவது கட்டுப்படுத்தமுடியும். 

ஜனநாயக சக்திகள் தான் ஒன்றிணைந்து,அரசிற்கும்/அதிகாரிகளுக்கும் உரிய அழுத்தம் கொடுத்து மணல் திருட்டு நடக்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?


No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...