Sunday, January 5, 2025

#ரா.கிருஷ்ணசாமிநாயுடு #தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர் #ஆர்கே

ஜனவரி 05,
#ரா.கிருஷ்ணசாமிநாயுடு #ஆர்கே #ராகி #தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர் 





R Krishnasamy Naidu: Ex,MLA and TNCC President
———————————————————-
விடுதலைப் போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு 1902ம் ஆண்டு ஜனவரி 05ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் 1922ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம், 1940ம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகம், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் இயக்கம் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

1924ம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார்.

1959ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராகப் பதவி வகித்தார்.

நேர்மையான, எளிமையான, பண்பான அரசியல் தலைவராக தனது இறுதிமூச்சு வரை வாழ்ந்த இவர் தன்னுடைய 72வது வயதில் (1973) மறைந்தார்.

#ரா.கிருஷ்ணசாமிநாயுடு
#தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவர்
#ஆர்கே
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-1-2025,

Photo-Krishnasamy Naidu with Kamaraj Nadar

No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.