நேற்று (4-1-2025) சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சியின் “காரா” அரங்கில் நடைபெற்ற புத்தகங்கள வெளியீட்டு /அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். “பெண் ஏன் அடிமையானாள்” என்கிற பெரியாரின் பிரசித்தி பெற்ற நூலைக் காரா பதிப்பகம் வெளியிட்டு அன்புக்குரிய தமிழக பெண்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் கனிமொழி மதி பேசினோர்.அதை பத்திரிகையாளர் காயத்திரி பெற்றுக்கொண்டார்.
கரிசல் மண்ணின் கவிஞர் கனகா பாலன் அவர்கள் எழுதிய “கூராப்பு” என்ற கவிதை நூலை அஅச்சிட்டு வந்தவுடன் சூடான அச்சு வாசனையோடு அறிமுக செய்தேன் .
அத்துடன், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் 2025 காலண்டரை சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞர் எம்.சைமன் ஜெயக்குமார் மற்றும் பொதுச் செயலாளர் சி.சங்கர் மணி ஆகியோர் தயாரித்து வழங்கிய நெல்லை சங்கர், நெல்லை மாவட்டத்தின் முக்கிய இடங்களை அழகாக அச்சிட்டு அவ்வரங்கிலேயே வெளியிட்ட 2025 இன் மாதாந்திர காலண்டரும் கிடைக்கப்பெற்றேன் கூடவே.
இந்த மதுரை சேது பொறியியல் கல்லூரித் தாளாளர், ஜலாலீல் மற்றும் கவிஞரும் சிறுகதை ஆசிரியருமான கனகா பாலன், காரா பதிப்பகத்தின் நிறுவனர் தம்பி ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் ஒட்டன்சத்திரம் மதிவாணன், போன்ற பலர் கலந்து கொண்டு நேற்று இரவு புத்தக கண்காட்சியில் கழித்த நேரம் பயனுள்ளதாகவும் பலரைச் சந்திக்க முடிந்தததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. காரா பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
5-1-2025,
No comments:
Post a Comment