Saturday, January 4, 2025

#*போபால் விஷவாயு படுகொலைகள்

#*போபால் விஷவாயு படுகொலைகள்* 



————————————
விஷவாயுக் கழிவுகளை 40 வருஷம் கழித்து அப்புறப்படுத்துகிறார்கள். மத்தியப் பிரதேச அரசின் மதிப்பீட்டின்படி, டிசம்பர் 2, 1984 அன்று இரவு போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலை யூனிட்டிலிருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மீதைல் ஐசோசயனேட் வாயு கசிந்ததில் குறைந்தது உடனே 3,000 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர் எவ்வளவு மோசமான பயங்கரமான விபத்து அது! அதன் பிறகு எத்தனை பேர் அதில் இறந்து போனார்கள் தெரியல.இன்னும் அதனால் பாதிக்கப்பட்டு அரையும் குறையுமாக உயிர் வாழ்ந்து வருகிறவர்கள் எத்தனை பேர் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனை மிஞ்சுகிறது.
உரிய நஷ்ட சரியே ஈடு யாருக்குமே வழங்கப்படவில்லை அந்த போபால் விஷவாயு ஆபத்திற்கு காரணமான அந்த தொழிற்சாலினுடைய  அதிபர் ஆண்டர்சன் மிகச் சுலபமாக எந்தவித தண்டனையும் இன்றித் தப்பி சென்று விட்டார். அந்த மோசமான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ராஜிவ் , சோனியா, அர்ஜின் சிங் அவரை எவ்வாறு பத்திரமாக பாதுகாத்து அமெரிக்காவுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டதெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது காலம் எல்லாவற்றையும் மழுங்கடித்து விடுகிறதா என்ன? மனித உயிர்களை விட்டில் பூச்சிகளைப் போல மள மளவென்று இருந்த இடத்திலேயே சாகடித்து விட்டு போன அந்த மூச்சுத் திணறிய மரணங்கள் எவ்வளவு கொடுமையானது. கழிவுகளோடு கழிவுகளாக எல்லாவற்றையும் அள்ளி சென்று விடுகிறது காலம். நீதபதி வி.ஆர்.



கிருஷ்ண அய்யர் இதை ‘’போபாசீமா’’ என கூறுவார்.

என்னை பொறுத்தவரையில் அதற்கு மறு விசாரணை தேவை என்று தான் கூறுவேன்.

#போபால்விஷவாயுபடுகொலைகள்
#bhopalunioncarbideissue

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-1-2025.

No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.