#மாவீரன்கட்டபொம்மான்_பிறந்தநாள்
••••
ஜனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப்பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
*****
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள். உடனே தமிழ்நாட்டில் அவர் வந்தேறிக் கூச்சல் கிளம்பி விட்டது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்களோ போனார்களோ இந்த தமிழ் வாழ்க்கைக் குடிமையியலை அதன்பண்பாடு கலாச்சாரம் வழிபாடு தொன்மங்கள் மற்றும் மொழி வழியாகவும் ஏற்றுக் கொண்டு இங்கு அவர்கள் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசாமல் ஒரே டெம்ப்லேட் போல இந்த கூச்சலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவரின் தாய்யார் பெயரோ ஆறுமுகத்தம்மாள் தமிழ் வழக்க பெயர்.
திருமலை நாயக்கர் எந்த மாவட்டத்தில் இருந்து வந்தார் குண்டூர் மாவட்டத்தில் இருந்தா ஹைதராபாத்தில் இருந்தா என்றெல்லாம் பார்த்துக் கொண்டா இங்கு ஆட்சி புரிந்தார்கள்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அவர்களுடைய இருப்பு பழைய தமிழ் வாழ்வில் உற்பத்தியில் விவசாயத்தில் நிர்வாகத்தில் சமூக சீர்திருத்தத்தில் முக்கியமாக இரண்டறக் கலந்து போனதை மறந்து விட்டு வந்தேறிகள் என்று சொல்லிக் கொண்டு திரிவது எந்த அர்த்தத்தில் நியாயம்!
இப்படி பிரிவினைப் பேசுவதில் இவர்கள் அடைந்த ஆதாயம் என்ன? வெறும் வெறி கூச்சல் தான் மிச்சம்!
அரசியல் ஆதாயங்களுக்காக மனிதர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி உணர்ச்சி ஏற்றி வன்முறையான வழியில் எதையும் சாதித்து விட முடியாது என்பதற்கு இதுநாள் வரை பிரிட்டிஷ் காலம் தொட்டு முதல்வர்களாகவும் அமைச்சர்களாகவும் தமிழக அரசியலில் நீடித்து வருவதோடு மற்றும் தொழில் விவசாயம் கி ரா போன்றவர்களின் இலக்கியத்திலும் கரிசல் மண் வாழ்க்கையிலும் யாவற்றிலும் தமிழகத்தின் பூர்வீக மக்களாகி வாழும் தெலுங்கு பேசும் மக்களைச் சீண்டிக் கொண்டிருப்பது எந்தப் பகுத்தறிவுமற்ற
பாசிசக்கூறுகள் தான். அறிவுடையோர் மற்றும் சனநாயக மாண்புடையோர் இத்தகையக் கூச்சலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவும கடந்து போகும்.
#வீரபாண்டியகட்டபொம்மன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-1-2025.
#மாவீரன்கட்டபொம்மான்_பிறந்தநாள்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
3-1-2025.
No comments:
Post a Comment