Friday, January 3, 2025

#கல்விமத்தியபட்டியல் #திமுக

#கல்விமத்தியபட்டியல் #திமுக
———————————————————
என்ன செய்வது!கல்வி மத்திய அரசுப் பட்டியலில் இருக்கிறது என்று திமுக வினர் திருவாய் மலர்கிறார்கள்.

அது சரி! யாருடைய ஆட்சி காலத்தில் கல்வி மத்திய அரசு பட்டியலுக்குள் போனது? தமிழகத்தில் கலைஞர் ஆட்சி இருக்கும்போதும் மத்தியில் திமுக தோழமை இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் தான் கல்வி மத்திய அரசு பட்டியலில்  சேர்ந்தது.அப்பொழுது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
மத்தியில் நூருல்ஹசன் கல்வி அமைச்சராக இருந்த போது தான் அது மாற்றப்பட்டது! இதற்கு என்ன சொல்லுகிறீர்கள். ஏதோ மத்தியில் இருந்து மிரட்டுகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள். உங்கள் காலத்தில் நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற்றப்பட்டது தானே! இன்று வந்து ஏதோ கையில் பத்திரிக்கை ஊடகங்கள் இருக்கிறது என்பதால் வாய்க்கு வந்ததையெல்லாம் நினைவு மறந்து பேசிக் கொண்டிருப்பதா? மத்திய அரசியில் திமுக 18 வருடம் அமைச்சர் அவையில் இருந்தபோது, இதை ஏன் பேசவில்லை.

21 அமைச்சர்களை வைத்து தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்? 
எத்தனை திட்டங்கள் வந்தன? 
எத்தனை புதிய ரெயில்வே திட்டங்கள் வந்தது? 

இதற்கு ஒரு டேட்டா கொடுக்கலாமே.. உண்மை என்னவென்றால் இத்தனை அமைச்சர்கள் இருந்தாலும் தமிழகத்துக்கு பைசாவுக்கு பயனில்லை. 

21 அமைச்சர்கள் இருந்த போது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டது. 

21 அமைச்சர்கள் இருந்த போது தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 

21 அமைச்சர்கள் இருந்த போது தான் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது. 

21 அமைச்சர்கள் இருந்தபோது தான் மீத்தேன் திட்டம் தமிழகத்திற்கு வந்தது. 

21 அமைச்சர்களை வைத்துக் கொண்டு கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றவில்லை. 

21 அமைச்சர்களைக் கொண்டு கச்சத்தீவை மீட்கவில்லை. 

21 அமைச்சர்களை கொண்டு காவிரிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை. 

21 அமைச்சர்களை கொண்டு முல்லைப் பெரியாறு பாலாறு பிரச்சினை என 18 நதி நீர் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரவில்லை. 

21 அமைச்சர்கள் இருந்த போதும் தமிழகத்துக்கு அதிகமான நிதி கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவில்லை. 

21 அமைச்சர்களை வைத்துக் கொண்டு மாநில சுயாட்சி கொண்டு வரவில்லை.

சேதுக்கல்வாய், ஊட்டி பிலிம் ஆலை மூடல், சேலம் இரும்பு  ஆலை விற்பனை,
நெய்வேலி லிக்னைட் ஆலை சிக்கல், நாகை மற்றும் கடலூர் துறைமுகம் என ப‌‌‌ல திட்டங்கள். தமிழக மீனவர் பிரச்சனை…..

இலங்கை தமிழர் பிரச்சனை…..

இப்படி பல தமிழக நலன்கள் கேள்வி குறி…

இவர்களின் பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது 

அத்தனை பேரும் ஊழலில் திளைத்தவர்கள். 

இவர்களால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் 21 தமிழர்கள் என்று போலி பெருமை பேசி வீணாய்ப் போகிறோம். 

ஆட்சி, அதிகாரத்தில் இருந்த போது எதுவுமே செய்யாமல், இன்று எதிர்கட்சியாய் இருக்கும் போது, திமுகவின் கொள்கைகளை பாஜக நிறைவேற்ற வேண்டும் என்று வெட்டிப்பேச்சு பேசுகிறார்கள். 

திராவிடம்,தமிழண்டா என்றால் தமிழர்களை ஏமாற்றலாம் என்பதை திமுக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. 

திமுகவும் & காங்கிரஸும் மக்களை ஏமாற்றும் கட்சிகள்

நடந்ததெல்லாம் நேரடியாக நடந்தது தான்! கல்வி மத்திய அரசுப் பட்டியலுக்கு போய்ச் சேர்ந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! காட்சிப்பிழைகள் அல்ல! நீங்கள் செய்த தவறுக்கு எல்லாம் வேறு யாரையாவது குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது!

#கல்விமத்தியபட்டியல்
#DMKFailsTN

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
2-1-2025


No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.