#*கோவில்பட்டியைமாவட்டம் ஆக்குவதற்குமறாக கோவில்பட்டி நகராட்சியுடன் 7 பஞ்சாயத்துகள் இணைப்பு*…….
*பொது மக்கள் கடும் எதிர்ப்பு*……
————————————
கோவில்பட்டியை மையமாகக் கொண்டு அதை மாவட்டம் ஆக்குவதற்கு தடையாக மறைந்த நண்பர் தூத்துக்குடி
என். பெரிய சாமியின் குடும்பம் இருப்பது தெரிந்தும் அவர்களின் திமுக மாவட்ட செயலாளர் தோரனையால் அதை மாவட்டம் ஆக்காமல் இருப்பது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!. இதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்குத் தெரியாதா? பெரியசாமி குடும்பம் தான் உங்களைக் காப்பாற்ற போகிறதா? கோவில்பட்டியை மாவட்டம் ஆக்க கூடாது என்று சொன்ன பெரியசாமி குடும்பத்தினர் பேச்சைத் தான் இதுவரை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பெரியசாமியைப் பொருத்தவரையில் உங்கள் குடும்பத்திற்கு என ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார் என்பதை தவிர அவருக்கும் திராவிட கொள்கைகளுக்கும் என்ன சம்பந்தம்!? உங்கள் அரசியல் அதிகாரங்களை எல்லா மாவட்டங்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது! நீங்கள் என்னவோ உங்கள் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இது நீடிக்காது!
கோவில்பட்டியை மாவட்டம் ஆக்குவதற்கு மறாக கோவில்பட்டி நகராட்சியுடன் 7 பஞ்சாயத்துகள் இணைப்பு.. பொது மக்கள் கடும் எதிர்ப்பு..
தமிழக அரசின் இது போன்ற அறிவிப்பு ஏழை மற்றும் வெகு ஜன மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே, கோவில்பட்டி நகராட்சியால் புது பேரூந்து நிலையத்தை செயல்படுத்த முடியாமல் விழி பதுங்கி போய் இருக்கிறது. தினசரி போக்குவரத்து நெருக்கடி காரணமாக மக்கள் சிரமம் சொல்லி மாளாது. இதுவரை கோவில்பட்டியை மாவட்டமாக கேட்டு நானும் தமிழக ஆளுநரை சந்தித்தேன். அத்துடன் தேசிய விவசாயிகள் சங்கமும் இன்னபிற அமைப்புகளும் போராட்டம் நடத்தி உள்ளன. அதே போல் கோவில்பட்டி யூனியன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைக்க பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை இளையரசனேந்தல் பிர்கா 12 பஞ்சாயத்துகளை இதுவரை இணைக்காமல் காலம் கடத்தி வரும் நிலையில் அவரசமாக கோவில்பட்டி நகராட்சியுடன் இனாம் மணியாச்சி, நாலாட்டின்புத்தூர், மந்திதோப்பு, மூப்பன்பட்டி, திட்டங்குளம், இழுப்பையூரணி, பாண்டவர்மங்களம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க திமுக தலைமையில் ஆன நகராட்சி தலைவர் திமுக தூண்டுதல் பேரில் தீர்மானம் நிறைவேற்றி அரசாங்கதிற்கு அனுப்பி அதை அப்படியே ஏற்று, கோவில்பட்டியுடன் இணைக்க அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டு உள்ளது ஏற்றுகொள்ளமுடியாது.
ஏற்கனவே மேற்படி பகுதிகள் அனைத்தும் கிராமம் சார்ந்த விவசாயம், ஆடு, மாடு வளர்த்தல், கோழி பண்ணை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இந்த நிலையில் நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் மேற்படி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் சூழ்நிலை உள்ளது.
அத்துடன் மேற்படி பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டம் சரியாக இல்லை என்று பல புகார்கள் வந்துள்ளன என பதிவுகள் இட்டுள்ளேன். இதற்கு மாறு பட்டவன்.மேற்படி பகுதிகள் நகராட்சியில் இணையும் பட்சத்தில் நூறு நாள் வேலை இல்லாமல் பொருளாதார இழப்பு குடும்பங்களுக்கு ஏற்படும். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் நலன் வருமானம் இன்றி பாதிப்புக்கு உள்ளாகும்.அத்துடன் சொத்துவரி பன்மடங்கு உயரும் நிலையில் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாவர்கள்.கிராம தற்சார்பு பாதிப்பு ஏற்படும்.ஆகவே,பல்வேறு அடிப்படை காரணிகள் பாதிப்பு அடையும் நிலை உள்ளது. அங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும். ஏற்கனவே, நகர்மயம் விளைவால் ஆக்கிரமிப்புகள் அதிகம் நடந்து வருவதால் முற்றிலும் கிராம பின்னணி கொண்ட மேற்படி 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது. அப்படி பொது மக்களின் பொது கருத்தையும் மீறி இணைக்க அரசு முயற்சி செய்யுமானால் மேற்படி 7 கிராம மக்களை அங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களை திரட்டி, போராட வேண்டிய நிலை வரும் என்பதை தமிழக ஆட்சியாளர்களுக்கு சொல்லி கொள்ளகிறேன்.
#கோவில்பட்டியைமாவட்டம்
#கோவில்பட்டிநகரட்சியில்7கிராமங்கள்இணைப்பு
#kovilpattidistrict
கோவில்பட்டி நியூஸ்
நம்ம ஊரு கோவில்பட்டி
கோவில்பட்டி பிளாஸ் நியூஸ்
Tn 96 Kovilpatti News
Kovilpatti news
Digital Kovilpatti
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-1-2025
No comments:
Post a Comment