#அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன்சுரங்கம்
———————————————————-
மதுரை மாவட்டத்தில் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதற்கு தீர்வு ஏற்படுத்த மாநில அரசின் நிலைகள் குழப்பமானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் சம்மதம் தெரிவித்து , சுரங்க ஒப்பந்தம் ஆகும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், இப்போது தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல காட்டிக்கொண்டது . மத்திய அரசும் இந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்த சம்மதம் தெரிவித்தது
அமைதியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தடுத்து நிறுத்துவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் நிலையில் திமுக ஆட்சிக்கு இல்லை என தெரிகிறது. மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவிப்புக்கு பிறகும் , டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் விவசாயிகளுக்கு இதுவரை ஸ்டாலின் திமுக ஆட்சியில் அளிக்கவில்லை. திமுக அரசே போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் வைகோவிக்கு மட்டும் அனுமதி கொடுத்து மேலூரில் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறார்.
வேடிக்கை. இவர் 1996 இல் Sterlite பிரச்சனையில் அன்றைய திமுக அரசை எதிர்த்தும் போராட்டம் நடத்தினார். வாழ்க வைகோ!
உடனே அரிட்டாப்பட்டி பகுதி விவசாயிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
இம் மாதிரியே கிராபைட் தாது வெட்ட
எனது கிராமம், குருஞ்சாக்குளம் சுற்றி 10 கிராமங்கள் அரிட்டாப்பட்டி மாதிரி விவசாயம் பாதிக்கும் வகையில் இருந்த நிலையில், மாநில திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பகுதி விவசாயிகளுடன் இணைந்து இது குறித்து முறையிட 2023 இல் நேரம் நான் கேட்டும் முதல்வர் சந்திக்க நேரத்தை ஒதுக்கவில்லை.
பின் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் நேரில் சந்தித்து எங்கள் பகுதி கிராபைட் கைவிடபட்டது. தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை K.Annamalai உதவியும் இதில் முக்கியமானது ஆகும்
டங்ஸ்டன்,நிலக்கரி,கிரெனைத்சிலிகான், கிராபைட்,தாமிரம்,எரி வாயு எண்ணெய் வளம் பவளப்பாறை இன்னும் பல எண்ணற்ற திட உலோகங்கள் எல்லாமே புவி அடியில் 6000 கிலோ மீட்டர் விட்டப்பரப்பில் நிறைந்து கொதிக்கும் நெருப்புக் குழம்பு மேலே வராமல் தடுப்பதற்கான என பல லேயர்கள். கீழ் உள்ளது. இதை தோண்டுவதால் பூமிக்கும் கடும சூற்று சிக்கல்கள ஏற்படும்.
#graphite_kurunjakulam
#tungsten_aritapatti
#அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன்சுரங்கம்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
7-1-2025.
No comments:
Post a Comment