Tuesday, October 27, 2015

சாத்தூர் அருகே மணல் திருட்டைத் தடுத்த சிறப்பு துணைஆய்வாளர் போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டாரா?

சாத்தூர் அருகே மணல் திருட்டைத் தடுத்த சிறப்பு துணைஆய்வாளரைக் கடத்திய போலீஸ்காரர்கள் : இந்தக் கொடுமையை எங்கேபோய் சொல்ல ...

__________________________________________



இன்றைக்கு சாத்தூரிலிருந்து நவநீதன் பேசினார். சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையத்தி்ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக திருப்பதி வெங்கடாசலபதி என்பவர் பணியாற்றினார். இவர் நேர்மையான அதிகாரி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நியாயமாக நடந்துகொள்பவர்.

குறிப்பாக இப்பகுதியில் மணல் கடத்தல் லாரிகளையும், டிராக்டர்களையும் ரெய்டு செய்யும் நடவடிக்கைகளில் இவர் இறங்குவதும் உண்டு. வைப்பாறில் நடக்கும் மணல்கொள்ளையைத் தடுக்கவேண்டும் என்று பல முயற்சிகளை இவர் மேற்கொண்டார், மணல் லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்களை எல்லாம் இவர் பறிமுதல் செய்தார். மணலைக் கொள்ளையடிப்பவர்களுக்கு இவர் தடையாக இருப்பதால், உடனே இவரைப் பற்றி அதிகார வர்க்கத்தினரிடம் எடுத்துச் சொல்லப்பட, சமீபத்தில் விருதுநகர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இந்த இடமாற்றம் அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. விருதுநகரில் நடந்த அமைச்சர்.ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில்,
“ நான் என்ன தவறு செய்தேன்; மணல் கடத்தலைத் தானே தடுத்தேன் அது தவறா? எனக்கு நியாயம் வேண்டும் இல்லை என்றால் தீக்குளிக்கப்போவதாக இவர் திட்டமிட்டிருப்பதை அறிந்து, மாவட்டக் காவல்துறை, அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் சிக்கலாகிவிடும் என்று பயந்து, திரும்பவும் அவரை ஆயுதப்படையிலிருந்து பழைய இடத்துக்கே மாற்றுதல் கொடுத்தனர். ஆயுதப்படையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அப்பையநாயக்கன்பட்டிக்கு சாத்தூர்வழியாக ஜீப்பில் செல்லும்போது, அவருடைய செல்போன்களை எல்லாம் பறித்துக்கொண்டு, அவரை பாதுகாப்புக் கைதிபோல ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சிலமணிநேரம் ஊரைச் சுற்றிச் சுற்று வந்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

ஏனெனில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மற்ற அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விருதுநகர் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாதே என்று இவரை ஜீப்பில் வைத்து கடத்தியுள்ளனர் என்று செய்தி. விருதுநகர் கூட்டம் முடிந்தவுடன் அவரை சாத்தூர் பஸ்நிலையத்தில் 11மணிக்கு இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

நேர்மையாகப் பணியாற்றிய போலிஸ் அதிகாரிக்கே இப்படி நிலையென்றால் சாதாரண பிரஜைக்கு என்ன பாதுகாப்பு? இதைக்குறித்து விருதுநகர் காவல் நிர்வாகத்திடம் கேட்டபோது, இவர் மீது தவறு இருப்பதாகவும், அவரை அழைத்து, விசாரித்து, எச்சரிக்கையும் செய்து, திரும்ப அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையத்திற்கே மாற்றிவிட்டோம் என்று பதில் வருகிறது. அவர்கள் சொல்லும் பதிலைக் கவனித்தாலே எவ்வளவு அபத்தமாக இருக்கின்றது.


நேர்மையே உன் விலை என்ன?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-10-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #TamilNaduPolice #Sattur

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...