Sunday, October 18, 2015

ருத்திரமாதேவி - Rani Rudrama Devi


சமீபத்தில் ருத்திரமாதேவியின் வரலாறு திரைப்படமாக வரப்போகின்றது என்ற பின்தான் யார் இந்த ருத்ரம்மா தேவி என்று பலர் அறிய முற்பட்டுள்ளனர். அரியபெரிய தியாக சீலர்களை சினிமா உலகம் சொன்னபிறகுதான் அறிய முற்படுவது வேதனை மட்டுமில்லாமல் அது ஒரு களங்கமும் கூட.

ருத்ரம்மா தேவி என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகி பற்றிதான் மக்களுக்குச் சிந்தனை ஓடுகின்றதே ஒழிய, ருத்திரம்மா தேவி யார் என்ற வரலாற்றை உண்மையாக நேர்மையாக நினைத்துப்பார்க்க வேண்டும்.

தக்காணப் பீடபுமியில் பெண் வீராங்கனையாக வாரங்கல்லைத் தலைமையாகக் கொண்ட மாபெரும் போராளி மட்டுமில்லாமல் மக்கள் நலனில் அக்கறைமிக்க ஆட்சியும் நடத்தியவர் தான் ருத்ரம்மா தேவி. சினிமா உலகம் சொல்லியபிறகுதான் நம்முடைய முன்னோர்களுடைய பெருமைகளை அறியவேண்டி இருக்கின்றது என்ன செய்ய?

கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசிதான் ருத்ரம்மா தேவி. வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.

இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.

எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 - இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 - இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-10-2015.

#KSR_Posts #KsRadhakrishnan #RaniRudramaDevi

Rudrama Devi was known as Rudramba at birth. Her father was Ganapatideva, the emperor of the Kakatiya dynasty who ruled from Orugallu, now known as Warangal, in Telangana. Rudrama was formally designated as a son through the ancient Putrika ceremony and given the male name of Rudradeva.

Rudrama Devi has begun to rule the kingdom jointly with her father as his co-regent from 1259-60 under the name of Rudradeva Maharaja. In the first two or three years of their joint rule, the kingdom was thrown into confusion and disorder due to Jatavarma Sundara Pandya I's invasion and the disastrous defeat of the Kakatiyas and their allies on the battle field of Muttukur, near Nellore. Though Ganapatideva was ultimately successful in turning back the tide of invasion, he suffered loss of territory and prestige and his hold over his feudatories and nobles was shaken. Under these circumstances, he retired from active politics.

Rudramma Devi succeeded her father to the Kakatiya throne at the age of 14, assuming the title Rani (Queen) and the name Rudradeva.Though she assumed full sovereignty in 1262-63 AD, she was not the crowned queen until 1269, which was when her father died. Her nomination and ascension to the throne was not entirely accepted; indeed, some people had turned against Ganapatideva even during his lifetime because of his decision to appoint a woman as his heir. On her accession some nobles who were unwilling to submit to a woman's authority, took up arms against her.

Ekamranatha's Pratapachantra refers to her step-brothers, Hariharadeva and Murarideva, ousting her and capturing Orugallu, and depicts Rudrama effectively tackling them with the help of the citizens and some powerful supporters. However, no other evidence is available to prove the existence of her step-brothers. Even if it is believed that some intransigent nobles and close relations rebelled against her authority, the Kayastha chief Jannigedeva and his younger brothers, Tripurari and Ambadeva, Recherla Prasaditya and Reddy chiefs such as Gona Ganna Reddy were firmly loyal to the queen, espoused her cause and helped her defeat the rebels.[citation needed]
The important people in her life were Shivadesikulu, a minister who served the dynasty, and Annamambikadevi, the wife of Gona Ganna Reddy.
Marriage

Rudramadevi married to Veerabhadra, a Vengi Chalukya prince (a branch of the Chalukyas of Badami) prince of Nidadavolu. The couple were childless and so adopted a girl that is prathaparudra. Those daughters married Mahadeva II, who was Veerabhadra's brother (which seems improbable as Mahadeva II, as claimed in the article, will be a paternal uncle. Such marriages were prohibited by the patriarchal Hindu law. Mahadeva II might be a cousin of Rudramadevi and of Kakatiya lineage as mentioned in the inscription found in Tumkru, Epigraphica Karnataka.Vol XII 1921-22 No.14. Page27.) and Anayyadeva of Kolanu dynasty, respectively. As mentioned in the Juttiga inscription, "Virabhadreshvara of Chalukyavamsha shared the burden of his kingdom with Rudramadevi, the daughter of Ganapati of Kakatiyas, and ruled the earth"


No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...