Saturday, January 23, 2016

மதுரை - Madurai

காலங்கார்த்தாலே 6 ம்ணிக்கே சூடா பணியாரம்....
7 மணிக்கே இடியாப்பமும் தேங்காய் பாலும்....
10 மணிக்கு மேல எப்பவுமே ஜில் ஜில் ஜிகர்தண்டா....
12 மணிக்கு மேல அம்சவல்லி பிரியாணி....
மதியானம் அம்மா மெஸ்ல வறுத்த கறி....
4 மணிக்கு மேல தினமனி தியேட்டர் வாசல்லயும், சினிப்பிரியா தியேட்டர் வாசல்லயும் பருத்திப் பால்...
சாயங்காலம் கோணார் மெஸ்ல கறி தோசை...
7 மணிக்கு கலெக்டர் ஆபீஸ் பக்கத்துல ரத்தப் பொறியலும், ஆட்டுக் கால் சூப்பும்...
முதலியார் மெஸ் இட்லியும் கறியும்...
ராத்திரி பூரா 5 வகை சட்னியோட 1 ரூபாய்க்கு இட்லி...
ராஜாபார்லியின் புகழ் பெற்ற கொக்கோ மிட்டாய்...
ஞாயிற்றுக் கிழமை விடியல் காலையிலேயே தெப்பக்குளத்துல கிரிக்கட் பிட்ச் புக்கிங்...
தினம் இரவுக்காட்சி பார்க்க அலுக்காத அளவுக்கு தியேட்டர்கள்....
பரளியில் ஒரு மரத்து கள்ளுடன் நாட்டுக்கோழி....
விடிகாலை 6 மணிக்கே வாசல் தெளிச்சு கோலம் போட்டு கடை திறக்கும் குஷ்பு ஒயின்ஸ்....
புகழ் பெற்ற சன் ஒயின்ஸ்...
நினைச்சா பைக்ல கொடைக்காணல்...
யோசிக்காமலேயே கும்பக்கரை அருவி....
குப்புற விழுந்தா சுருளி அருவி...
அலுக்கும் போதெல்லாம் குட்லாடம்பட்டி அருவி....
கைமாற்று குடுத்து விட்டு திருப்பி கேட்காத நண்பன்
Madurai during 1964 near Mission Hospital



No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...