Tuesday, January 12, 2016

இன்று திமிங்கலங்கள்.... நாளை மனிதன்......????

திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.

6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை, மணப்பாடு, கல்லாமொழியில் உள்ள கடல் பகுதியின் கடற்கரைகளில் சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன.

இது குறித்து பரபரப்பு ஏற்பட்டு காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் என்ன செய்வது என்று திகைத்தனர்.

தமிழகத்தின் கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம், கடற்குதிரை உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் இயற்கை தட்ப வெப்ப மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

இதற்கு நடுவே நேற்று திருச்செந்தூர் கடற்கரையோரங்களில் திமிங்கிலங்கள் இறந்த (அ) மயக்கமான நிலையில் கரை ஒதுங்குவது அதிகரித்துள்ளது. இதற்கு ஒற்றை காரணத்தை காட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்டால் பின்னால் ஏற்படவுள்ள ஆபத்தை அறிந்துகொள்ள முயற்சிக்காத முட்டாள்கள்தான் நாம். தமிழக ஆற்றங் கரையோரங்களில் விவசாயம் செழித்திருக்கிறதோ இல்லையோ... நச்சுக்களை வெளியேற்றும் ஆலைகள் "செழிப்பாகவே" உள்ளன. இவற்றிலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆறுகள் மூலம் கடலில் கலந்த வண்ணம் உள்ளன. இதனால் கடல் உயிரினங்களுக்கான உணவாக உள்ள சிறு உயிரினங்கள், பாசிகள், பவளப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இது ஒரு காரணம் என்றாலும், கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதையும், கடல் நீர் மாசினால், உயிரினங்கள் சுவாசிக்க திணறுவதை ( சென்னை டிராபிக்கில் வாகனங்கள் கக்கும் புகையில் நாம் மூச்சுவிட திணறுவதைப் போலத்தான்) மேலை நாடுகள் தற்போது தான் கவனிக்கத் தொடங்கியுள்ளன. வெப்பநிலை அதிகமானா.... ஆவியாகி மழைதான பெய்யும் என்று நீங்கள் கேட்கலாம். ஆவியாகும் அதே சூழலில் கடலில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வகை சிறு உயிரனங்கள் வெப்பத்தை தாங்காமல் இறந்து கொண்டிருப்பதை நாம் கவனிப்பது இல்லை. மேலும் கடல் நீரில் ஆக்சிஜன் அளவும் குறைந்து அமிலத் தன்மை அதிகரித்துக் கொண்டிருப்பதை இனி எதிர்கால நிகழ்வுகள் நமக்கு போறனியில் தட்டி உறுதிப்படுத்தும் என நம்புகிறேன். இறுதியாக இதுபோன்ற தகவல்களை நாம் புறந்தள்ளிவிட்டு இயற்கையை மாசுபடுத்திக் கொண்டே இருந்தால் நாமும் நாளை செத்துக்கிடப்போம் ... திமிங்கலங்களைப் போல...

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

திருச்செந்தூர் அருகே கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள்  நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கிராமத்தில், கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள்  நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர். 6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன.

ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. அப்பகுதி மீனவர்களும் கடலுக்குள் கொண்டு விட்டும் அவை மீண்டும் கரைக்கு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதியில் நெல்லை சரக டி.ஜ.ஜி அன்பு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான காரணங்களை ஆராய்ந்தனர். ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.

கடலில் வாழும் பெருமடைகாறல் என்ற ஒருவகை மீன்கள் பிற மீன் இனத்திடம் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஒரு வகையான திரவத்தை சுரக்குமாம். இந்த திரவத்தின் பாதிப்பு காரணமாக திமிங்கலங்கள் மயக்கம் அடைந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும், நச்சுத்தன்மை காரணமாக சில திமிங்கலங்கள் இறந்திருக்கலாம் என்று மீன்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...