Sunday, January 31, 2016

பொதுவாழ்வில் தூய்மையாக்க மக்கள் தரும் தண்டனைகள்

உக்ரைன் நாட்டில் ஊழல் செய்த பொதுவாழ்வில் உள்ளவர்களை குப்பைத் தொட்டியில் எறிந்து மக்களே தண்டித்து

அவமானப்படுத்துகின்ற காட்சியைப் பாருங்கள். அரசியல்வாதி என்றால் எவரும் வினா எழுப்ப முடியாது என்ற மமதையில்

உள்ளவர்களுக்கெல்லாம் இந்தக் காட்சிகள் பாடங்களாக அமையும்.

அரசியலில் இருப்பவர்கள் நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையோடு கண்ணியமான நெறிமுறைகளோடு பணிகளை

ஆற்றவேண்டும்.

சத்தியம் எங்கள் வேதம், சமத்துவம் எங்கள் கீதம்! என்ற வகையில் நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள்! சொல்லுங்கள், நல்லதை

துணிந்து சொல்லுங்கள்!  ஆற்றுங்கள், மக்கள் பணி ஆற்றுங்கள்!

இப்படி அரசியலில் பணியாற்றினால் மக்கள் பாராட்டுவார்கள். தகுதியும், தரமும், நேர்மையும், ஆற்றலும்

கொண்டவர்களையே மக்கள் அங்கீகரிக்கவேண்டும். தகுதியே தடையாக இருப்பதை மாற்றவேண்டும்.  இன்றைக்கு உக்ரைன்

மக்கள் துணிந்து தவறு செய்யும் அரசியல்வாதியை நேர்மையோடு கேவலப்படுத்துகின்ற காட்சிகளை நாம் அங்கீகரிப்போம்.

மக்கள் வெள்ளந்திகள்தானே என்று ஆள வந்தவர்கள் நினைப்பதற்கு வாய்ப்பளிக்காமல்; மக்களே, மக்கள் விரோதிகளை தண்டித்து

அவர்களை பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்.

http://www.dailymail.co.uk/news/article-2757586/Ukrainian-minister-Vitaly-Zhuravsky-thrown-bin-pelted-rubbish-angry-mob.html#i-ae4b1208ca3a7247

No comments:

Post a Comment

#Vaiko சுயபரிசோதனை செய்யணும்...

  youtube.com Vaiko சுயபரிசோதனை செய்யணும்...மதிமுக இனி என்னாவகும்? KS Radhakrishnan Interview | Mallai Sathya Vaiko சுயபரிசோதனை செய்யணும்......