Tuesday, January 5, 2016

திரு ஆர். முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி

23 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் அரசியல் கட்சியின் முதல் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டேன் என்பதை நீங்கள் நினைவு கூர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி. இதெல்லாம் ஆங்கில ஹிந்து ஏட்டில் கோலப்பன் போன்றவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. உங்களுடைய பின்னூட்டத்தில் துரை மோகன்ராஜ் பதிவிட்ட வார்த்தைகளில் எனக்கு கிடைத்த பாராட்டு என்றே கருதுகிறேன்.  இதைவிட வேறு என்ன அங்கீகாரம் தேவை.  இதான் உண்மை யதார்த்தம். 

துரை மோகன்ராஜின் பதிவு: "ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பது சாதாரண பதவியல்ல. கட்சியின் நிலைப்பாடுகளை, அதன் முடிவுகளை வெளி உலகிற்குச் சொல்லும் தலையாய பணி. யாருக்குச் சொல்கிறோம்-எப்படி சொல்கிறோம்-எதைச் சொல்கிறோம் என்பதெல்லாம் மிக மிகத் தேவைப்படும் ஒரு பதவி.

அரசியல் கட்சிகளில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு அடுத்து செய்தித் தொடர்பாளர் என்ற பதவியைக் கொண்ட மூன்றாவது கட்சியாக மதிமுக என்ற ஒரு மாநிலக் கட்சி தான் இருந்தது.சுமார் 23 வருடங்களுக்கு முன்பே அத்தகைய செய்தித் தொடர்பாளர் என்ற பதவியை மதிமுகவில் அலங்கரித்தவர் திரு Radhakrishnan KS அவர்களாவார். இவர் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட பின்னரே திமுகவில் திரு.ஆலடி அருணா அவர்கள் செய்தித் தொடர்புச் "செயலாளராக" நியமக்கப்பட்டார்.

செய்தித் தொடர்பாளர் என்ற பணியில் மட்டுமல்ல களத்திலும் கேஎஸ்ஆர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. கழுகுமலை சமணர் வரலாற்று சிற்பங்களை பாதுகாக்க அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று அதை புணரமைத்ததில் தொடங்கி-வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசை தூக்கில் இருந்து காப்பறியது,இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்,விவசாயிகள் போராட்டம்,நதிநீர் இணைப்பு என அவர் ஆற்றிய களப்பணிகள் ஏராளம் ஏராளம்.இதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும்,ஆன்டன் பாலசிங்கம் உள்பட பல போராளிகளுக்கு உதவியதையும்,அதனால் கேஎஸ்ஆர் ரின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் பட்டியலிடவில்லை."

போலிகளை போல நடிக்க முடியாது.  என்னுடைய ஆதர்ஷபுருஷன் பாரதி சொன்னதைப் போல நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்தான் எனக்கு நெறிமுறைகள் ஆகும்.

போலிகளும் பகட்டுகளும் கவரிங் நகைகள் மின்னுவதை போல சில காலம் மின்னும். ஆனால் வரலாற்றில் ஏறாது.

திரு ஆர். முத்துக்குமார் அவர்கள் முகநூலில் வெளியிட்ட பதிவு

அரசியல் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் - செய்தித் தொடர்பாளர் என்ற இரண்டும் முற்றிலும் வெவ்வேறானது. கட்சியின் கொள்கைகளைத் தொண்டர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கொண்டுசெல்பவர் கொ.ப.செ. கட்சி எடுத்த கொள்கை முடிவுகளையும் கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளையும் ஊடகங்களுக்குக் கொண்டு செல்பவர் செய்தித் தொடர்பாளர்.

எனக்கு கொ.ப.செ என்றால் ஜெயலலிதாதான் சட்டென்று நினைவுக்கு வருவார். அவர் மட்டுமல்ல, அவரைக் கொ.ப.செவாக நியமித்தபோது திமுக தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆர்.எம்.வீ கொடுத்த அழகான பதிலும்தான். செய்தித் தொடர்பாளர் என்றால் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், ஆலடி அருணாவும்தான் நினைவுக்கு வருவார்கள். கே.எஸ்.ஆர்தான் செய்தித் தொடர்பாளர்களின் முன்னோடி.

கொ.ப.செ என்ற பதவியின் பெயரில் இப்போது மாற்றங்கள் வந்துவிட்டன. மதிமுகவில் கொள்கை விளக்க அணிச் செயலாளர். விடுதலைச் சிறுத்தைகளில் கருத்தியல் பரப்புச் செயலாளர். வேறொரு கட்சியில், பிரசாரக்குழு செயலாளர். செய்தித் தொடர்பாளர் என்பது ஊடகப்பிரிவு என்ற தனிப்பிரிவுக்குள் அடங்கி, அங்கே பல துணைப் பதவிகள் வந்திருக்கின்றன.

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...