Tuesday, May 1, 2018

மே தின வாழ்த்துக்கள்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே
எந்திரங்கள் வகுத்திடு வீரே
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே!
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன்
பிரம்ம தேவன் கலையிங்கு நீரே!
Image may contain: one or more people and outdoor
மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனை செய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடுவீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய்வீரே!

விண்ணில் நின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு விரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!

நாட்டிலே அறம் கூட்டி வைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவீர் நீரே!

-பாரதி.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-05-2018

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்