Thursday, July 18, 2019

#பசிதம்பரம்2009தேர்தல்வழக்கு #இன்னும்முடிவுக்குவரவில்லை #வேடிக்கை. இது தான் இன்றைய ஜனநாயக கட்டமைப்பின் கட்டமைப்பதா.


இது தான் இன்றைய ஜனநாயக கட்டமைப்பின் நிலை.
--------------------------
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ப. சிதம்பரம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அன்றைக்கு அவர் தாக்கல் செய்த மனுவில் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த காரணத்தால் தேர்தலில் ஏராளமான குளறுபடிகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தீர்ப்புக்கு வராமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது.அதன் பின் இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்ததும் விட்டது.தேர்தலில் வெற்றிபெற்ற ப.சிதம்பரம் தனது பதவிக் காலம் முடிந்தே பல ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த வழக்கில் இனி இந்த தீர்ப்பு வந்து யாருக்கு என்ன பயன்? இது தான் இன்றைய ஜனநாயக கட்டமைப்பின் நிலை.முடிவுக்கு வராத வேடிக்கையான வழக்கின் தீர்ப்பு ஏடுகளில் மட்டுமே இடம்பெறும்.
இது நியாயம் தானா? இதையும் நியாயப்படுத்துகிறோமா?
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-07-2019

தினமணி- 16-7-2019.

No photo description available.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...