Wednesday, July 10, 2019

முரண்பாடுகளுக்கப்பால், திமுகவில் எஞ்சி நிற்கும் அறிவுஜீவிகளில் ஒருவர்



முரண்பாடுகளுக்கப்பால், திமுகவில் எஞ்சி நிற்கும் அறிவுஜீவிகளில் ஒருவர் Radhakrishnan KS நான் பதிவது போல, யாரும் கேட்கிறார்களோ படிக்கிறார்களோ இல்லையோ எட்டுத்திக்கும் சென்று சுவையான பல செய்திகளை திரட்டி வாட்ஸப் மூலமாகவும் முகநூல் வழியேவும் தெரியப்படுத்துவார். அவருடைய காலாண்டிதழ் கதை சொல்லியையும் இலவசமாகவே அனுப்பிவைக்கிறார். கி ராஜநாராயணனின் அறிமுகவுரை என்றால் கேட்கவா வேண்டும் குதூகலத்திற்கு. கோவில்பட்டி விவசாயப்பண்ணை தொடங்கி தமிழறிஞர் மணவாளன் வரை கே எஸ் ஆர் அலசியிருக்கிறார். இன்னும் பல கதைகள் கவிதைகள்.
மணா மணா ‘துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மரபு’ என்னை அடிக்கடி சங்கடப்படவைக்கும் ஒரு போக்கினை விவாதிக்கிறது. சங்ககாலம் தொட்டு எப்படி நாம் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து வந்திருக்கிறோம் இப்போது ரிஷ்திக் நிஷிதாவில் வந்து முடிந்திருக்கிறது...திராவிட இயக்கத்திற்கு நம்பகத்தன்மை இருந்தவரை தமிழ்ப் பெயர்கள் வைப்பது லெனின் ஸ்டாலின் என்றெல்லாம் அழைத்துக்கொள்வது பெருமையாக இருந்தது...இன்று சமஸ்கிருத மயப் பெயர்கள்தான் எங்கும்...சென்னை மாநகர மேயராக சுப்பிரமணியம் இருந்தபோது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டால் மோதிரம் அளிக்கும் திட்டம் கூட கொண்டுவந்தார்...பெரிதாக எவரும் கண்டுகொள்ளவில்லை..வட இந்தியப் பெயர் மோகம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது...இதில் சன் டிவி வகையறாக்களுக்கும் முக்கிய பங்குண்டு...ஆனால் அதையெல்லாம் மணா சொல்லாமல் டபாய்க்கிறார்...அது போக தெரிந்துகொள்ளவேண்டிய தரவுகளும் உண்டு
கே எஸ் ஆருக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இப்பணி தொடரவேண்டும்.
Image may contain: 1 person, smiling, standing, plant and outdoor

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...