Monday, December 14, 2020

 #அரசியல்_கூறுகள்_2

————————————————-



State, political organization of society, or the body politic, or, more narrowly, the institutions of government. The state is a form of human association distinguished from other social groups by its purpose, the establishment of order and security; its methods, the laws and their enforcement; its territory, the area of jurisdiction or geographic boundaries; and finally by its sovereignty. The state consists, most broadly, of the agreement of the individuals on the means whereby disputes are settled in the form of laws. In such countries as the United States, Australia, Nigeria, Mexico, and Brazil, the term state (or a cognate) also refers to political units that are not sovereign themselves but subject to the authority of the larger state, or federal union.
Commonly accepted definition of the state is the one given at the Montevideo Convention on Rights and Duties of States in 1933. It provides that "[t]he state as a person of international law should possess the following qualifications: (a) a permanent population; (b) a defined territory; (c) government; and (d) capacity to enter into relations with the other states."[19] And that "[t]he federal state shall constitute a sole person in the eyes of international law."
According to the Oxford English Dictionary, a state is "a. an organized political community under one government; a commonwealth; a nation. b. such a community forming part of a federal republic, esp the United States of America".
Confounding the definition problem is that "state" and "government" are often used as synonyms in common conversation and even some academic discourse. According to this definition schema, the states are nonphysical persons of international law, governments are organizations of people.The relationship between a government and its state is one of representation and authorized agency.
அரசைப்பற்றி ஆயும் இயலை அரசியல் என்கிறோம். இவ்வியல் அரசியல் சமூகங்களில் அமைப்பையும், அவற்றின் அரசாங்கங்களையும்பற்றி விளக்குகிறது. அரசின் தோற்றம், வளர்ச்சி, உருமலர்ச்சி, நோக்கம், அலுவல்கள், அதன் பலவகை வடிவங்கள், நிறுவனங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை எல்லாம் அரசியல் பயிலும் மாணவன் ஓரளவு கற்கிறான். ஆகவே ஆங்கிலேய நூலாசிரியர் கெட்டல் (Gettell) கூறுவதுபோல், ‘அரசியல் என்பது அரசு இதுவரை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கும் ஒரு வரலாற்று ஆய்வு; அரசு இப்போது எவ்வாறு இருக்கின்றது என்பதை அறியும் பகுப்பாராய்ச்சி; அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அரசியல், அறவியல் கோணங்களிலிருந்து வாதாடும் ஓர் இயல்.’
அரசு என்னும் சொல்லைப் பலர் பல பொருட்களில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அரசியலில் நாம் அதை ஒரு தனிப் பொருளை உணர்த்தும் கலைச் சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆகவே, அரசைப் பற்றி ஆய விழையும்போது முதன் முதலில் அரசு என்பதன் பொருளை வரையறுக்க வேண்டும். அரசின் அடிப்படைக் கூறுகளை ஆயும்போது அரசு என்பதன் உண்மையான பொருள் புலப்படுகின்றது. ஓர் அரசில் நான்கு அடிப்படை இயல்புகள் அல்லது கூறுகள் உள்ளன. அவை நிலப்பகுதி, மக்கள், அரசாங்கம், இறைமை என்பன ஆகும்.
நிலப்பகுதி
——————-
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அரசினது இன்றியமையாத இயல்புகளுள் ஒன்று. அஃதில்லையேல், அரசு நிலைபெற இயலாது. பேராசிரியர் ம.இரத்தினசாமி கூறுவதுபோல, ‘ஓர் அரசை அமைப்பதற்கு மக்கள் நிலத்தில் வேரூன்ற வேண்டும்’. அதாவது, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் நிலையாக வாழவில்லையெனில், அவர்களால் அரசாங்கத்தை நிறுவ முடியாது. ஆகவே தான், நாடோடிகளால் அரசை உருவாக்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக, இன்றைய இஸ்ரேல் அரசு உருவாகும்வரை யூதர்களால் தமக்கென்று ஓர் அரசை அமைத்து கொள்ள இயலவில்லை. ஏனெனில், அவர்கள் உலகின் பல பகுதிகளில் சிதறிக்கிடந்தனர். எனவே, அரசு தோன்றுவதற்கு திட்டவட்டமாக ஒரு நிலப்பகுதி தேவை.
நிலப்பகுதி என்று சொல்லும்போது, அதிலுள்ள நிலம், ஆறுகள், குளங்கள் பிற நீர்நிலைகள் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நாட்டின் அதிகாரத்துக்குட்பட்ட கரையோரக் கடல் பரப்பையும், (Territorial waters) நிலப்பகுதியுடன் சேர்க்க வேண்டும். இக்கடல் பரப்பு நாட்டின் கரையோரத்திலிருந்து எத்தனை மைல் தொலைவு வரை நாட்டின் ஆட்சி எல்லைக்குட்பட்டது என்பதை பன்னாட்டுச் சட்டமும், நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தங்களும் வரையறுக்கின்றன. அண்மைக் காலத்தில், வானவூர்திப் பயணம் பெருகி வந்துள்ளதால் நிலப்பகுதிக்கு உயரே ஓரளவு தொலைவு வரை அரசின் ஆட்சி எல்லைக்குட்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
அரசின் நிலப்பகுதி எந்த அளவில் அமையவேண்டுமெனத் திட்டமாக வரையறுக்க முடியாது. கிரேக்கர்கள் தமது பண்டைய அரசுகளைச் சிறிய நகர அரசுகளாக நிறுவினர். ரோமானியப் பேரரசு மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. இன்றைய அரசுகளில் சுவிட்ஸர்லாந்து, பெல்ஜியம், ஹாலந்து, வத்திக்கான் போன்றவை அளவில் சிறியவை. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்றவை மிகப் பெரியவை.
மக்கள்
—————-
அரசு என்பது மக்கள் கூடி வாழும் ஓர் அமைப்பு. ஆகவே, மக்களின்றி அரசு அமைய முடியாது. அரசு வெறும் நிலப்பகுதியில் தனது ஆட்சியை செலுத்த முடியாது. அங்கு மக்கள் வாழ வேண்டும். “நிலம் அரசினது இன்றியமையாத அடிப்படையெனில், மக்கள் அரசைக் கட்டும் சிற்பிகளும், கொற்றர்களும் ஆவார்கள். நிலம் ஒவியத்திரையாகுமெனில், மக்கள் அதை வடிவங்களாலும் வண்ணத்தினாலும் நிரப்பும் ஒவியராவர்” என்று பேராசிரியர் ம.இரத்தினசாமி குறிப்பிடுகின்றார்.
நிலப்பகுதியின் அளவைப் போலவே மக்களின் தொகையும் அரசினது அமைப்புக்கு அத்துணை முக்கியமானதன்று. எடுத்துக் காட்டாக, வத்திக்கான் அரசில் ஒரு சில ஆயிரம் மக்கள்தான் வாழ்கின்றனர். ஆனால், இந்தியா, சீனா போன்ற அரசுகளில் பல கோடி மக்கள் வாழ்கின்றனர்.
அரசாங்கம்
———————
அரசாங்கம் என்பது அரசின் ஒரு கருவி, அஃதின்றி அரசு உயிர் வாழ இயலாது. அதன் வாயிலாகவே அரசின் விருப்பாற்றல் வெளிப்பட்டு செயல்படுகின்றது. அரசாங்கம், இறைமை அதிகாரங்களைச் செலுத்தும் உரிமை பெற்றுள்ள ஒரு நிறுவனம், பொதுவாக பேச்சு வழக்கில் நாம் ஒரு நாட்டின் அமைச்சரவையை அந்நாட்டு அரசாங்கம் என்று கூறுகிறோம். ஆனால், அரசாங்கம் என்பது, அதன் விரிந்த பொருளில் பார்க்கும்போது, அமைச்சர் குழுவிலும் பெரியது. அதன்படி, நாட்டின் உள்ளும் புறமும் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையாகும். ஆகவே, அதற்கு முதலில் படைத்துறை ஆற்றல் தேவை. இரண்டாவது, சட்ட ஆக்க அதிகாரம் அல்லது சட்டங்களை இயற்றும் ஆற்றல் வேண்டும். மூன்றாவது, அரசினைக் காத்து, அரசின் சார்பாகத் தான் இயற்றும் சட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருளைப் பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய ஆற்றல் வேண்டும். சுருங்கக் கூறினால், அரசாங்கத்தின் மூன்று துறைகளென நாம் சொல்லும் சட்டமியற்றும் அதிகாரம், நிருவாகத் துறை அதிகாரம், நீதித்துரை அதிகாரம் ஆகிய இம்மூன்றும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் எனலாம். இத்தகைய அரசாங்கம் இல்லையெனில், அரசு நிலைபெற இயலாது: அரசு குலைந்து குழப்பம் மலியும். ப்ளண்ட்ஷ்லி(Bluntschli) கூறுவதுபோல், “அதிகாரம் உடையோரும், அதற்குக் கீழ்படிவோரும் இல்லையெனில், அரசு இராது; குழப்பமே நிலவும்.”
இறைமை
——————-
இறைமை எனும் சொல் மேலான அதிகாரத்தைக் குறிக்கின்றது. இந்த இறைமை அதிகாரமே அரசைப் பிற சமூக நிறுவனங்களின்று வேறுபடுத்துகின்றது. இறைமை உட்புற இறைமை, வெளிப்புற இறைமை என இருவகைப்படும். அரசின் ஆட்சி எல்லைக்குள்ளே வாழும், தனி மனிதர்களின்மேல் அல்லது அவர்களின் நிறுவனங்களின்மேல் ஓர் ஆள் அல்லது குழுச் செலுத்தி வரும் மேலாண்மையே ‘உட்புற இறைமை’யாகும். ஓர் அரசு வேறு அரசொன்றையும், சார்ந்திராமல் முழுவதும் தன்னுரிமையுடன் திகழ்வதை ‘வெளிபுற இறைமை’ என்கிறோம்.
இக்காலஅரசு,ஹெச்.ஜே.லாஸ்கி(H.J.Laski) குறிப்பிடுவதுபோல, ‘தனது ஆட்சிப் பரப்பு முழுவதும் மேலாண்மை பெற்றுள்ளது. அங்குள்ள அனைவருக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் ஆணை பிறப்பிக்கின்றது. யாரிடமிருந்தும் ஆணைகளை ஏற்பதில்லை.’
இறைமை எனும் சொல் மேலாண்மையைக் குறிப்பிடுகிறதெனப் பார்த்தோம். ஆனால், அதை அரசுடன் இணைக்கும்போது அஃது ஒரு தனிச் சிறப்பான அதிகாரத்தைக் குறிக்கின்றது. ஓர் அரசில் இறைமை அதிகாரம் எங்குள்ளதென நாம் அறிய முயலும்போது, அச்சொல் வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பிரிட்டனின் அரசியைப் போன்று பெயரளவுக்கு அரசின் தலைவராக இருப்பவர்களை அது குறிப்பிடலாம். அதாவது, நாட்டின் நீதி முறையின்படி சட்டமியற்றி ஆட்சி செய்யும் ஆளை அல்லது குழுவைக் குறிக்கும், அல்லது அரசியல் இறைமையைக் குறிக்கலாம். அதாவது, இறைமை முடிவாக நிலைபெற்றிருக்கும் குழுவையோ, தொகுதியையோ காட்டலாம். இக்கால அரசியல் இது வாக்காளர்களைக் குறிக்கின்றது. இது சிலவேளைகளில் கூட்டு இறைமை (Collective Sovereignty) எனப்படும்.
ஆகவே, ஓர் அரசில் இறைமை அதிகாரம் எங்குள்ளதென எளிதில் கண்டுபிடிக்க இயலாது. ஆயினும், ஓர் அரசில் மக்கள் வழக்கமாகப் பணிந்து வரும் ஓர் ஆள் அல்லது ஒரு குழுவிடம் இறைமை அதிகாரம் இருக்கிறதென நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என சிலரின் கருத்து. ஆனால் இறையமை
மக்களிடம்தான் உள்ளது.
அரசு என்பது நிலப்பகுதி, மக்கள், அரசாங்கம், இறைமை எனும் நான்கு கூறுகளைக் கொண்ட அமைப்பாகும். கெட்டல் கூறுவதுபோல், ‘ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இறைமை அதிகாரத்துடன் வாழும் மக்கள் தொகுதியே அரசு’. அமெரிக்க குடியரசு தலைவராக இருந்த உட்ரோ வில்சன் ‘ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் சட்டத்திற்கென இணைந்து வாழும் மக்கள் தொகுதியே அரசு’ என்கிறார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...