Friday, December 11, 2020

 #சுப்ரமணிய_ராஜு_நினைவு_தினம்_இன்று.

———————————————————-



வாயிலே அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக் கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்; நீரே அழுக்கு! -
-சுப்ரமண்ய ராஜு
தமிழ்ப் படைப்பாளிகளின் பட்டியலில் மறைந்த சுப்ரமண்ய ராஜு முக்கிய புள்ளி. வாழ்ந்ததும் எழுதியதும் கொஞ்சம்தான். அறிவாளியாக மதிப்பிடப்பட்ட சுப்ரமண்ய ராஜு, தனது 39-ஆவது வயதில் சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் அருகே சாலை விபத்தில் காலமானார்.
புதுச்சேரியில் பிறந்தவர்.ராஜு வாழ்ந்தது சென்னையில்தான். சுந்தரம் கிளேட்னிலும், பிறகு டிடிகே நிறுவனத்திலும் ராஜு பணிபுரிந்தார். நவீனக் கவிதைகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜு, 1970-களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். அவர் அதிகம் எழுதியவை சிறுகதைகளே. ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ தொகுப்பில் 30 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் உள்ளன. அவற்றுள் ‘இன்று நிஜம்’ குறுநாவல் மட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் பிரசுரம் கண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசின் சிறந்த புத்தகத்துக்கானவிருதும்கிடைத்திருக்கிறது.இவரின்வ படைப்புகளின் தளம் நகர வாழ்க்கையும். 70களில் சென்னை மாநகரின் மத்தியத்தர வர்க்கத்தை பற்றியராஜுவின்கதைகளில்பேசுபெருளாயின. இவரின் கதைகள் எளிய வடிவில் இருக்கும்.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...