Thursday, December 10, 2020

 #கிராமத்து_சில_பழக்க_வழக்கங்கள்

———————————————————-


••ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்ய வேண்டுமானால் உழுக்கு அல்லது ஆழாக்கு, நாழி, சிரட்டை, கரண்டி ஏதாவது ஒன்றில் அடுத்த வீட்டு அடுப்பில் எப்போதும் சூடாகிக் கொண்டிருக்கும். பால் சுடவைத்த அடுப்பில் தீக்கங்கை எடுத்து வந்து அடுப்புப் பற்ற வைப்பார்கள். இந்தத் தீக்கங்கு கோனார்கள் வீட்டில்தான் எப்பொழுதும் இருக்கும்..
••ஆட்டுக் கறியைத் தேவைக்குப் போக மீதியை உப்பு, மஞ்சள், இந்த இரண்டையும் சேர்த்துத் தடவி கறித் துண்டில் நடுவில் துவாரம் போட்டு ஒரு கயிற்றில் கோர்த்து வெயிலில் நன்றாக காயவைத்து பின் ஒரு பழைய மண்பானையில் போட்டு வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது சமைத்து சாப்பிடுவார்கள். இதற்கு “உப்புக்கண்டம்” என்று பெயர்.
••ஆடு மேய்ப்பவர்கள் மூங்கில் குழலில் சாப்பாடு கொண்டுபோய் மதிய உணவாக சாப்பிடுவார்கள் உணவு கெட்டுப்போகாது.
•• கிணறுகள் இல்லாத இடத்திற்கு உழவு உழச் செல்பவர்கள் மண் தோண்டியில், கம்மஞ் சோறு, தினை, குதிரை வாலி, சாமைச்சோறுகளை உருண்டையா உருட்டி நீர் ஆகாரத்தில் போட்டுக் கொண்டு செல்லுவார்கள். தண்ணீர் தாகம் ஏற்பட்ட நேரத்தில் தண்ணீரை குடிப்பார்கள். பின்பு மதிய வேளையில் இந்த சோற்று உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மீதி தண்ணீரையும் குடிப்பார்கள். இது வெயில் காலத்தில் உடம்பின் சூட்டைத் தணிக்கும்.
••புளிச்சிக்கீரையை கடைந்து உணவுடன் சேர்த்து முன் காலத்தில் சாப்பிடுவார்கள். இது இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்வராமல் தடுக்கும்.
6. ஒரு துக்க வீட்டில் உறவினர் இறந்தால் கண்ணீர்விட்டு அழும்போது அதிக கண்ணீர் வெளியேறும் இதை ஈடுகட்ட மறுநாள் இறந்தவரைப் புதைத்த இடத்தில் நாய், நரி தோண்டாமல் இருக்கக் குழி மெழுகுவார்கள். அப்பொழுது அகத்திக் கீரையை அவித்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். இதனால் முதல்நாள் இழந்த கண்ணீர் இந்த அகத்திக் கீரை ஈடுகட்டுமாம்.
••கிராமத்தில் அம்மன் கோவில் கொடை விழாவில் சாமி ஆடுபவர்களுக்கு வீடு வீடாகத் தண்ணீரைத்து தலைவழியாக ஊற்றி நேர்த்திக் கடனை தீர்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஜலதோசம் ஏற்படாதவறு மறுநாள் காலையில் அம்மனுக்கு மஞ்சள் பானை பொங்கல் என்று வைப்பார்கள். அதில் மஞ்சள் பொடி கலந்து கொதிக்க வைக்கும்போது முதல்நாள் சாமி ஆடியவர்கள் வேப்பிலையை மஞ்சள்பானையில் முக்கி எடுத்துத் தலையில் தெளித்து தெளித்து ஆடுவார்கள். இதனால் ஜலதோசம் பிடிக்காதாம்.
இப்பொழுதும் ஜலதோசம் பிடித்தால் மஞ்சள் பொடி கலந்து தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி வைத்து கொண்டு ஒரு போர்வையை மூடிக் கொண்டு அந்த ஆவியை பிடித்தால் ஜலதோசம் நீங்கிவிடும்.
•• மாட்டுத்தாவணி அல்லது வெகுதூரக் கோவிலுக்கு செல்பவர்கள் நார்ப்பெட்டி அல்லது துணியில் சோற்றைக் கட்டி கொண்டு செல்லுவார்கள். இதற்கு கட்டுச் சோறு என்று பெயர். சோறு கெட்டுப்போகாது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-12-2020.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...