Thursday, December 10, 2020

 #விவசாயம்_விவசாயிகள்

———————————————————-


விவசாயம் அழிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஆன்மா என்று கருதப்படுகிற கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்கின்றனர். அதிகமான விவசாயிகள் தற்கொலைகள். இதற்கு காரணம் என்ன? எங்கோ தவறு இருக்கின்றது. அதை திருத்த வேண்டாமா?.
விவசாயம் படிப்படியாக மடிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 1960ல் விவசாயத்திற்கு பல சவால்கள் வந்தாலும், உற்பத்தி திறனை கூடுதலாக்குவது, விவசாயிகளுக்கு நேரடி அல்லது மறைமுக மானியம் மூலம் அவருடைய செலவினங்களை கட்டுக்குள் வைத்திருப்பது, உற்பத்தி செலவுகளை விட லாபகரமான விலை கிடைத்தது. சந்தைகளில் நுகர்வோர் நலனும் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு உள்ள நெருக்கடி ஏன்?. 1991ல் ஏற்பட்ட உலகமயமாக்கல், புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற வகையில் இன்றைய விவசாயம் பாதிக்கப்பட்டது. மழை பெய்யாத வறட்சி காலத்திலும், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மழை பெய்தும் விவசாயிகளுக்கு சரியான விலை இல்லாமல் கடனாளியாக தவிக்கின்றனர்.
காரணங்கள்:
தாராளமயம் என்பது விலை கட்டுப்பாடு என்கிற கடிவாளத்தை அவிழ்த்துவிட்டதால் விவசாய இடுபொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன.

உரம் போன்ற முக்கியமான இடுபொருட்களுக்கு தரப்பட்டு வந்த மானியங்கள் ஆண்டுக்கு ஆண்டு குறைக்கப்பட்டிருப்பதால் விவசாய செலவினங்கள் அதிகரித்தே வந்துள்ளன.
அரசுப் பொருளாதாரத்திலிருந்து விலகுதல் என்ற பெயரில் பொது முதலீடுகள் வெட்டப்பட்டதால் நீர்ப்பாசனம், வடிகால்கள், வெள்ளக்கட்டுப்பாடு போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சேவைகள் விரிவாக்கப்படுவதும், செலவின வெட்டுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உணவு தானியங்கள், பருத்தி போன்றவற்றின் இறக்குமதிகள், தாராளமாக்கப்பட்டதால் உள்நாட்டு சந்தையில் விவசாயிகளுக்கு உரிய விலைகள் கிடைக்கவில்லை.
இதற்கு தீர்வுதான் என்ன?
விவசாய வல்லுநர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் முக்கிய பரிந்துரையான உற்பத்தி செலவினம்+50 சதவீதத்தை குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என்பது அமலாக்கப்பட வேண்டும்.
விலைகளின் நிலைத்தன்மை.
உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு பொது முதலீடு.
மறுபகிர்மான ரீதியாக மானியங்களை உறுதிசெய்தல்.

விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கியதால் மேலும் நெருக்கடிகளும் சிக்கல்களும் தொடர்கின்றன. விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கின்றோம் என்று அரசு ஒப்புக்கு சொல்வது எல்லாம் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காது. முதன்மை 60களில் வந்த பசுமைப்புரட்சி விவசாயத்தை நாசப்படுத்தி விட்டது. மாநில அரசும் இரண்டாவது பசுமைப்புரட்சி என்ற ஒன்றை சொல்கிறது. இவையெல்லாம், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற போக்காகும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் சரியாக நடைமுறைக்கு வரவில்லை. சாகுபடியாகும் மொத்த செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை இன்றைக்கும் வரை அரசுக்கு பாரமுகமாக இருக்கிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-12-2020

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...