Thursday, December 10, 2020

 #தாமஸ்பெயின்_அன்று_கூறிய_கருத்துக்கள்..

————————————————————


“எதிர்கால சந்ததியினரைக் காலாகாலத்திற்கும், என்றென்றைக்கும் கட்டுப்படுத்தி வைத்து உலகத்தை இப்படிதான் ஆள வேண்டும்: இவர்கள்தான் ஆள வேண்டும் என்று சட்ட திட்டங்களை வகுத்து, அவர்களைக் கட்டுப்படுத்த்ஹி வைக்கக் கூடிய அதிகாரம் கொண்ட நாடாளுமன்றமோ, ஆளக்கூடிய மனிதர்களோ அதிகாரம் கொண்ட ஆட்சி மன்றமோ உலகில் இருந்ததில்லை” இருக்கப் போவதுமில்லை: அப்படி இருக்கவும் முடியாது.
ஒவ்வொரு காலத்தில் வாழும் பரம்பரையினர், அவர்கள் காலத்தில் எழும் பிரச்சினைகளை சந்தித்துத் தீர்வுகாண்பர்!. அவைகளுக்கு அந்தப் பரம்பரை தீர்வு கண்டாக வேண்டும். இறந்தவர்களுக்கு அல்ல: இருப்பவர்களுக்கே இடவசதி செய்து தரவேண்டும். மனிதன் இறந்தவுடன் அவனது அதிகாரமும் அவனது தேவைகளும் அத்துடன் முற்றுப்பெறுகின்றன.
அப்படி இறந்த மனிதனுக்கு இவ்வுலகப் பிரச்சினைகளில் எவ்வித பங்கும் கிடையாது. உலகை ஆளக்கூடியவர்கள் இவர்கள்தான். அவர்கள் இவ்வாறுதான் ஆளவேண்டும் என்று கூறுவதற்கு அவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது: அதிகாரமும் கிடையாது. எந்த விதத்தில் அரசு அமைய வேண்டும். எந்தவிதத்தில் அரசின் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்று கூறுவதற்கு உரிமையும் இல்லை.”
இதே கருத்தை வலியுறுத்த - இதே கருத்தை வற்புறுத்திட உச்ச நீதிமன்றம் கோலக்நாத் வழக்கு, கேசவாநந்தபாரதி போன்ற வழக்குகளில் கூறிய கருத்தையும் கூறிட விரும்புகிறேன்.
”அரசியல் சாசனச் சட்டத்தை வகுத்தவர்கள்,அடுத்த பரம்பரையில் வரும் மக்கள் அணிவதற்கான இறுகலான அரசியல் சட்டையைத் தயாரித்து வைத்துள்ளனர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அவ்வப்பொழுது எழும் சமூக பொருளாதார, இன்ன பிற முக்கிய பிரச்சினைகள் சட்டமன்றத்தினர் அவ்வப்பொழுது சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் கால ஓட்டத்திலே ஏற்படலாம் எப்படி என்பதை அன்று அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளனர். எனவே இவைகள் மாற்றத்திற்கும் தேவைப்படும் விரிவுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் basic structure என்ற அரசியல் சாசன அடிப்படை விஷயங்களை மாற்றவே தனிப்பட்ட விருப்பின்படி திருத்தவே முடியாது. இது முக்கியமான விடயம்.
இதே கருத்தை மீண்டும் வலியுறுத்த அரசியல் வித்தகர் ஹரால்டு லாஸ்கியின் கருத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். “கால ஓட்டத்திலே எல்லாம் மாறுகின்றன. சித்தாந்தங்கள் மாறுகின்றன.” உரிமை மீதான கருத்தும் மாறுகிறது. பரம்பரைக்கும் பரம்பரைக்கும் இடையே மாற்றம் ஏற்படுகிறது. நாட்டிற்கும் நாட்டிற்கும் இடையே மாற்றம் ஏற்படுகிறது. இவைகளைப் போன்று மனிதனது சிந்தனையும், எண்ணமும் மாற்றமடைகின்றன. இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இந்த அடிப்படையில்தான் ஹரால்டு லாஸ்கி மேலும் கூறுகிறார்.
“சுதந்திரத்திற்கான போராட்டம், அரசியல் என்ற அடிப்படை தளத்திலிருந்து புறப்பட்டு, பொருளாதார உரிமை அதிகாரத்திலிருந்து ஒருசிறு பகுதியை பெற்றிட முனையும் நாட்டத்தைவிட, சமூக கூட்டுறவு அமைப்பில் உற்பத்தியாகும் நலனைப் பெறுவதில் முனைப்பு காட்டும் சமூக சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு, அதன்மூலம் அதிக நன்மையை அடையக் காட்டும் நாட்டம் அதிகமாகவே இருக்கிறது.”
இந்தக் கருத்தை ஒட்டித்தான் கே.டி.மாளவியா ஒரு தனி மனிதத் தன்மை சமூகத்திற்கும் சோசலிசத்திற்கும் இடம் தருகிறது என்று முன்பு கூறிய கருத்து நினைவில் வருகிறது.
Thomas Paine (born Thomas Pain)(February 9, 1737 [O.S. January 29, 1736] – June 8, 1809) was an English-born American political activist, philosopher, political theorist, and revolutionary. He authored Common Sense (1776) and The American Crisis (1776–1783), the two most influential pamphlets at the start of the American Revolution, and helped inspire the patriots in 1776 to declare independence from Great Britain.His ideas reflected Enlightenment-era ideals of transnational human rights.Historian Saul K. Padover described him as "a corsetmaker by trade, a journalist by profession, and a propagandist by inclination".
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...