Saturday, August 21, 2021

#ஆப்கான்_இந்தியா_சீனா

 #ஆப்கான்_இந்தியா_சீனா

——————————————
ஆப்கானில் இந்திய தூதரகம் தாலிபான்களால் முற்றிலும் நொறுக்கப்பட்டுள்ளது. நாம் அங்கு அனுப்பும் சர்க்கரை, மருந்துகள், தேயிலை, காப்பி, மசாலா பொருட்கள், தொழில்நுட்ப பாகங்கள், ஆடை - துணி வகைகள் போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் வெங்காயம், பெருங்காய மூலப்பொருட்கள்நிறுத்தப்பட்டன.இப்படி இந்தியா மீது கொடும் வன்மத்தில் தாலிபான்கள் கூடிவிட்டனர். சீனா, பாகிஸ்தான் தனது ஆதரவை தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம். இப்படிதான் சீனா, இலங்கையில் வந்துவிடும் என்றும் அதை
தடுக்க, இலங்கையில் உள்ள சிங்கள அரசுக்கு உதவி செய்கிறோம் என்று தொடர்ந்து இந்திய அரசு 20 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டுவருகிறது. ஆனால் இலங்கையில் தமிழர் பகுதியை தாண்டிக் கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் தற்போது நிலை கொண்டு
விட்டது. இதிலும் தோற்றுவிட்டோம். சீனா, இந்தியப் பெருங்கடலிலும் வடக்கே பாமீர் முடிச்சிலிருந்து பாக்கிஸ்தான் ஆப்கான் வரை தரைவழியாக பட்டுவழி சாலை அமைக்க தீர்மானித்துள்ளது. இது இந்தியாவுக்கு நல்லதா? 130 கோடி ஜனத்தொகை கொண்டுள்ள இந்திய மக்களின் எதிர்காலம், இந்தியாவின் பாதுகாப்பு என்பதெல்லாம் எதிர் காலத்தில் என்னவாகும் என்று சொல்ல முடியவில்லை.
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கையில் மாற்றமில்லை. அதில் உள்ளகேடுகளைக் கலைத்துத்திருத்தப்படுவதுமில்லை. ஆனால் 2024-ன் நாடாளுமன்ற தேர்தலைப் பற்றி பேசுகிறார்கள், பேசட்டும். இந்த கொடிய ஆபத்தை எப்படி எதிர்காலத்தில் நேர்கொள்ள போகின்றோம் என்ற சிந்தனை யாருக்கும் எழுவதுமில்லை. இதுதான் இந்தியா. நடப்பது நடக்கட்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21.08.2021

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...