Monday, August 23, 2021

#அசாம்_மிசோரம்_மாநில_எல்லை_சிக்கல்கள்:

 #அசாம்_மிசோரம்_மாநில_எல்லை_சிக்கல்கள்:

———————————————————-

அசாம், மிசோரம் மாநில எல்லைச்சிக்கல்கள் விபரிதமாக சென்று கொண்டிருக்கிறது. இரண்டு மாநிலங்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் அங்கு அமைதிநிலைத் திரும்பவில்லை. அசாம் காவல் துறையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். இரு மாநிலத்தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மிசோரம் தனிமாநிலமாக 1987-ல் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அசாமுக்கும் மிசோரமுக்கும் 165.கி.மீ நீளத்துக்கான எல்லைப்பிரச்சனை இருந்துகொண்டே வருகிறது. மிசோரம் யூனியன் பிரதேசமாக இருந்ததிலிருந்து இந்த சிக்கல்கள் தொடர்கின்றது.
1933–ல் எல்லைகள் பிரிக்கும் போது சரியாக பிரிக்கவில்லை என்ற வாதங்கள் எழுந்தன. 1875, 1933 வருடங்களில் முடிவெடுத்தபடி எல்லைகள் சரியாக வரையறுக்கவில்லை என்பது தான் இன்றைய சர்ச்சைகள்.
இதைப்போலவே,
1. மகாராஷ்டிரா - கர்நாடக எல்லை பிரச்சனை. 1956-லிருந்து பெல்காம் நகர் மகாராஷ்டிரத்திற்கு சொந்தமென்று கூறிவரும் பிரச்சனை.
2. ஒடிசா - ஆந்திரப் பிரதேசத்திற்கு இடையில் கோராபுட் மாவட்டத்தில் இருமாநில எல்லைப்பகுதியில் அமைந்த 3 கிராமங்கள் குறித்தான சர்ச்சை மற்றும் கஞ்சம், கஜபதி ராயகடா மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் குறித்தான பிரச்சனை.
3. ஒடிசா - மேற்கு வங்கம் எல்லையில் பாலசோர் மாவட்டத்தில் உள்ள 82 மாவட்டங்கள் குறித்தான பிரச்சனை, ஒடிசா மேற்குவங்க மாநிலங்களுக்கிடையில் புகைந்து கொண்டிருக்கிறது.
4. ஒடிசா - ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கிடையே எல்லையில் உள்ள ஜகநாத்பூர் கிராமத்தை குறித்தான பிரச்சனை.
5. ஹரியானா – இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கிடையே தொழில் நகரமாக இருக்கும் பர்வானூ மற்றும் பஞ்ச்குலா மாவட்ட பிரச்சனைகள்.
6. காஷ்மீர் – லடாக் இடையே உள்ள எல்லை பிரச்சனைகள்.
7. லடாக் – இமாச்சலப்பிரதேசம், சர்ச்சு மற்றும் மணாலி-லே நெடுஞ்சாலைக் குறித்தான எல்லைப்பிரச்சனைகள்.
8. அசாம் - மேகாலயா மாநிலங்களுக்கிடையே மிகிர் மலைகள் அமைந்த கர்பி ஆங்லாங் மாவட்ட பிரச்சனை.
9. அசாம் - நாகாலாந்து இடையில் 434.கி.மீ தொலைவில் உள்ள எல்லை பிரச்சனைகள். அசாமிலுள்ள, சிவசாகர் – நாகான், கோலாகாட், நாகா மலைகள் பிரச்சனை குறித்து பெரும் கலவரங்கள் 1968, 1979, 1985, 2007, 2014 ஆகிய வருடங்களில் நடந்து பல உயிர்கள் பலியாயின.
இப்படியான சர்ச்சைகள், பலமாநிலங்களுக்கு உண்டு.
தமிழகத்தில், பாலகாடு - அட்டப்பாடி பிரச்சனை வந்தது. கன்னியாகுமரியில் மாவட்டத்தில் கேரள - தமிழ்நாடு எல்லையில் உள்ள தமிழக கிராமம் ஒன்றுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னால், கேரள அரசினுடைய ரேசன்கார்டு வழங்கியதெல்லாம் சர்ச்சையானது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23.08.2021

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...