Tuesday, August 24, 2021

#இவர்களுக்கும்_மக்கள்_வாக்களித்துள்ளார்கள்…. #ஓட்டுக்கள்_விற்பனை_என…

 #இவர்களுக்கும்_மக்கள்_வாக்களித்துள்ளார்கள்….

———————————————————-

மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் 363 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. (ஏ.டி.ஆர்) என்ற தன்னார்வ நிறுவனம் இந்த ஆய்வை வெளிப்படுத்தியுள்ளது.
இதுதான் இன்றைய ஜனநாயகமா? பிறகு எப்படி நேர்மையான அரசியல் இருக்கும்?
இவர்களுக்கும் மக்கள் வாக்களித்துள்
ளார்கள்….
ஓட்டுக்கள் விற்பனை என….
பிறகு என்ன அரசியல் அறங்களைப் பேசமுடியும்…..
இவர்களின் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகள் தொடர்பாக மக்களாட்சிக்கான சீர்திருத்தங்கள் கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்) என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. 542 மக்களவை எம்.பி-க்கள், 1,953 எம்.எல்.ஏ-க்கள் ஆகியோரது வேட்புமனுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 67 எம்.பி-க்கள் மீதும், 296 எம்.எல்.ஏ-க்கள் மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர குற்றப் பின்னணி கொண்டவர்களில் 39 பேர் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர்களாக உள்ளனர்.
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தீவிர குற்றப் பின்னணி உடைய எம்.பி, எம்.எல்.ஏ-க்களில் 83 பேர் பாஜகவையும், 47 பேர் காங்கிரஸையும் 25 பேர் திரிணமூல் காங்கிரஸையும் சேர்ந்தவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களவை எம்.பி-க்கள் 24 பேர் மீது மொத்தமாக 43 குற்ற வழக்குகளும், 111 எம்.எல்.ஏ-க்கள் மீது மொத்தமாக 315 குற்ற வழக்குகளும் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24.08.2021

No comments:

Post a Comment

2023-2024