Sunday, May 21, 2023

#மலரே குறிஞ்சி மலரே (டாக்டர்சிவா)என்றும் எனக்கு தித்திக்கும் இனிய பாடல். பல நினைவுகோளடு மனத்தை தொடும் பாடல்கூட…


#மலரே குறிஞ்சி மலரே (டாக்டர்சிவா)என்றும் எனக்கு தித்திக்கும் இனிய பாடல். பல நினைவுகோளடு மனத்தை தொடும்
பாடல்கூட…
—————————————————————
'டாக்டர் சிவா' படத்தின் வெளிப்புறக் காட்சிகள் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மெர்க்காரா மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. 'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்' பாடல் காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மஞ்சுளா நடித்தபோது, படப்பிடிப்பைக் காணவந்த ரசிகர் கூட்டத்தின் ஒரு பகுதி.1975 கல்லூரி நாட்களி்ல் வெளி வந்த திரைப்படம்.

மலரே. குறிஞ்சி மலரே என்றும் எனக்கு தித்திக்கும் இனிய பாடல். பல நினைவுகோளடு மனத்தை தொடும்
பாடல்கூட…
 
மலரே,குறிஞ்சி மலரே.
தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ

கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ

நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம்

தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே. குறிஞ்சி மலரே.

பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களே

பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு

நல்வாழ்த்து கூறுங்களே

தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே.

#மலரே_குறிஞ்சி_மலரே #டாக்டர்_சிவா

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-5-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...