Wednesday, May 31, 2023

மேக்கேதாட் அணை சிக்கல்…..

#மேக்கேதாட்டில் அணை கட்டப்படுவது உறுதி என்று சொல்லும் கர்நாடக கங்கிரஸ்அரசு…
முதல்வர் முக.ஸ்டாலின் தனது கூட்டணி கட்சி ஆட்சியிலுள்ள கர்நாடகாவிடம் பேசி தீர்க்க வேண்டும்…..

அணையை கட்ட விடவே மாட்டோம் கட்டவும் முடியாது என்று சொன்ன முதல்வர்  ஸ்டாலின இப்போது என்ன செய்யப் போகிறார்…..

மேக்கேதாட் அணை விவகாரம். 
பிரிட்டிஷ் அரசின் ஒப்பந்தப்படி நமக்கு மேட்டூர் அணையும், கர்நாடகா அரசுக்கு கே ஆர் எஸ் அணையும் கட்டப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும், காவிரியின் முக்கிய துணை ஆறுகளான கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆறுகளில் அணைகளை கட்டி நீர் தேக்கியது கர்நாடக அரசு.

ஏற்கனவே காவிரியின் பெரும்பாலான நீர் மாண்டியா, மைசூர் மாவட்ட பாசனத்திற்கும், பெங்களூரு நகர குடிநீருக்கும் போகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அதிகம் கழிவு நீர் தான் இருக்கிறது. இப்ப மீண்டும் மேக்கேதாட்டில் அணை வேண்டும் என்கிறது கர்நாடகம். ஏன் அந்த மேக்கேதாட்டில் தான் அணை கட்ட வேண்டுமா என்றால், அதன் பின்னால் இருப்பதும் நீர் சார்ந்த அரசியல் தான். 

நமக்கு தெரியாத சில துணையாறுகள் கே ஆர் எஸ் அணைக்கு பிறகும் காவிரியில் இருக்கிறது. அவை ஸ்வர்ணாவதி, ஊடுதோரே, சிம்ஷா, அர்க்காவதி ஆகும். இந்த துணை ஆறுகளிலும் பெரிய அணைகள் உண்டு. இவையெல்லாம் மேக்கேதாட்டில் முன்பாகவே காவிரியில் கலந்து விடுகிறது. ஆக, மிச்சம் மீதி இருக்கும் இந்த மொத்த காவிரி நீரையும் மேகதாது அணையில் தேக்குவது தான் கர்நாடக அரசின் திட்டம். அவர்கள் பார்வையில் கர்நாடகாவில் இருந்து வரும் நீர், கர்நாடகாவிற்கே என்பதாகும். 

இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு என்றால், பருவ காலத்தில் காவிரியில் வரும் வெள்ள நீரும் தடைபடும். டெல்டா மாவட்டங்களில் இரு போக சாகுபடி குறையும். வெள்ளை நீரை நம்பியிருக்கும் சரபங்கா திட்டம் தடைபடும். நாளடைவில் 13 மாவட்ட மக்களின் கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக பவானி அணை, திருமூர்த்தி அணை, அமராவதி அணை மற்றும் ஆழியாறு அணையில் இருந்து நீர் எடுப்பார்கள். விவசாய பாசனமா, குடிநீரா என்று பார்த்தால் குடிநீருக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும். இதனால் காவிரி பகுதி மாவட்டங்கள் மட்டுமில்லாமல் கொங்கு பகுதி மாவட்டங்களும் சேர்ந்து பாதிக்கப்படும்.

கர்நாடக அரசியல்வாதி ஆற்றுல (மேக்கேதாட்டில்)அணைகட்ட துடிக்கிறான்
தமிழ்நாடு அரசியல்வாதி இயற்கை வளமான ஆற்றில் மணல் எடுக்க துடிக்கிறான்
இங்கு சாரயத்தை அந்த தொழிலை 
காக்க துடிக்கிறான்..
வாழ்க இந்த உவர் மண்


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...