Wednesday, May 3, 2023

#கர்நாடக சட்டமன்றத்தேர்தல்

#கர்நாடக சட்டமன்றத்தேர்தல் 
————————————
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நடந்த வண்ணம் உள்ளது. முகநூலில் கவனிக்கின்றேன். அங்கே வேலை பார்க்கும் பொறியாளர்கள், பணியாளர்கள் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்வதும் பார்வையில் படுகிறது. யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும்போதுதான் தெரியும்.

அண்ணன் பழ.நெடுமாறனுக்கு உற்ற அண்ணனாகவும்   இருந்த,என் மீது அன்பு கொண்ட  கர்நாடக முன்னாள் முதல்வர் டி.தேவராஜ் அர்ஸ்தான் நீண்ட காலமாக கர்நாடக முதல்வராக இருந்தவர். 7 ஆண்டுகள் 269 நாட்கள் முதல்வராக இருந்தார். 1972 - 77 ஆண்டுகளில் முதல்முறையாகவும் 1978 முதல் 1980 வரை இரண்டாவது முறையாகவும் முதல்வராக இருந்தார். அடுத்து இரண்டாவதாக காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ்.நிஜலிங்கப்பா 7 ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள் முதல்வராக இருந்தார். மூன்றாவதாக ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா கட்சி சார்பில் 5 ஆண்டுகள் 216 நாட்கள் முதல்வராக இருந்தார். 1983 இலிருந்து 1988 வரை இருமுறை அவர் முதல்வராக இருந்தார்.

கர்நாடகாவில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற சில தேர்தல்களில் காங்கிரஸின் ஆதிக்கம் இருந்ததற்கு காரணம் களத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே. 1957, 1962 மற்றும் 1967ல் ஒரு தொகுதிக்கு ஏறக்குறைய  இரண்டு, மூன்று மட்டுமே போட்டியாளர்களாய் இருந்தனர். 

அப்போதைய தேர்தல்களில் பெரும்பாலான காங்கிரஸ் போட்டியாளர்கள் எதிராளிகள் யாரும் இல்லாமலே வெற்றிப்பெற்றனர். 1957ல் அன்னாராவ் பசவப்ப, அஃப்சல்பூர் தொகுதியில் வேறு போட்டியாளர் இல்லாததால்தானாகவேதேர்ந்தெடுக்கப்
பட்டார். 

அதே போல் 1962ல், டாலிகாட்டில் டி என் பாடில் மற்றும் ஹன்சூரில் போட்டியாளர்கள் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1967ல்   சாந்தூரை சார்ந்த எம் ஒய் கோர்பேட் அவ்வாரே தேர்ந்தெடுக்கப்
பட்டார். ஒரு தொகுதியில் சராசரியாக 13 போட்டியாளர்கள்  2013லும் 11 போட்டியாளர்கள் 2018லும் இருந்தனர்.

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
3-4-2023.


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...