Saturday, May 27, 2023

#பெருங்குளம் செங்கோல் ஆதீனம் வரலாறு SENGOL mutt -Perungulam

#பெருங்குளம்செங்கோல்ஆதீனம் வரலாறு! 
————————————————————-
பெருங்குளம்   செங்கோல் ஆதீனம் தூத்துக்குடி மாவட்டம்  தாமிரபரணி (Thaamirabharani) கரை அருகே மூத்த தமிழ் இலக்கிய படைப்பாளி மாதவையா, அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி பிறந்த  பெருங்குளத்தில்  அமைத்துள்ள சைவ மடமாகும். இந்த ஆதீனம்  1500 ஆண்டுகளுக்கு   மேல்  பழமையானது.   பாண்டிய   மன்னர்களுக்கு  செங்கோல் வழங்கக்கூடிய  உரிமையைப்  பெற்று









வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது.



முற்காலத்தில் 18வது பட்டம் குருமகா சன்னிதானம் திகம்பர சித்தர் காலத்தில் சோழ மன்னரிடம் போரிட்டு வென்ற பாண்டிய மன்னர் பெருஙகுளத்தில்   திகம்பர சித்தருக்கு மடம் அமைத்து அவரை வழிபாடு செய்து அவர் வழங்கிய செங்கோலை பெற்று மகிழ்ந்தான் தொடர்ந்து கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு அக்காலத்தில் செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்ற ஆதீனமாக பெருங்குளம் ஆதீனம் ஒரு காலத்தில் இருந்து வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என்ற ஒரு சிறப்புப் பெயர் அக்காலம் முதலே இருந்து வருகிறது

102ஆவது  மடாதிபதியின் பூர்வாசிரமஅரசு அனுமதியுடன்  சிறைச்சாலையில் கைதிகளுக்கு சமய ஒழுக்கத்தை 35ஆண்டுகள் செய்துள்ளார்.அப்பர் அருட்பணி மன்றம்1953-ல் தவத்திரு குன்றக்குடிஅடிகளார்பாளையங்கோட்டை
யில் அருள்நெறிதிருக்கூட்டமாகதொடங்கப்
பட்டு அதன்பொறுப்பாளராகம.பேச்சியப்பன் இரண்டு ஆண்டுகள் பணி செய்த பின் அப்பர் அருட்பணி மன்றமாக செயல்படதுவங்கியது.
  
இப்படி பல பணிகளை தொடர்ந்து சுவாமிகள்'செங்கோல் ஆதினம் 102-ஆவது மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
பேச்சியப்பனாரை சைவ மெய்யன்பர்கள் தேர்ந்தெடுத்தனர்.

23-ஆவது குரு மகாசந்நிதானமாக எழுந்தருளியுள்ள சீர்வளாசீர் சிவபிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள். 15-9-1996 தாது ஆண்டு ஆவணித்திங்கள் 30-ஆம் நாள்  ஞாயிற்றுக்கிழமை பெருங்குளம் செங்கோல் ஆதீன மடத்தில் திருவாவடுதுறையாதீன குருமகாசந்நிதானமானவர்கள் செய்வித்தருளினார்கள்."செஞ்சொல்மணி"பேச்சியப்பனார் அவர்கள் செங்கோல் ஆதீனத்தின்102ஆம்பட்டம்ஆதீனகர்த்தராக,குருமகாசந்நிதானமாக"ஶ்ரீலஶ்ரீ கல்யாண சுந்தர  சத்திய ஞான பண்டார சந்நிதிகள்"என்ற திருப்பெயருடன் தொடங்கினார்.கடந்த 35 ஆண்டு காலம் குரு இன்றி சீர்குலைந்த  ஆதீனத்தை செம்மைப்படுத்தி பட்டமேற்ற நாளிலிருந்து நான்கு ஆண்டுகளில் திருநெல்வேலி மேல ரத வீதியில்  உள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடமாகிய ஈசான மடத்தில் முகாம் அலுவலகம் அமைத்து கொண்டு பெருங்குளம் செங்கோலாதீன நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள்.15-9-2000 முதல்  பெருங்குளம் செங்கோலாதீன  சென்று தங்கி மடத்திலேயே அருளாட்சி செய்து வந்தார்கள்.

இதன் முந்தைய  குருசந்நிந்நிதானங்க
ளெல்லாம் பண்டார  சந்நிதிகள் என்றே வழங்க பெற்று    இப்போது  102-ஆம் பட்டமாக   அழைப்பிதழில் பண்டார சந்நிதிகள்  என்றே வழங்கப்பட்டுள்ளது.
பண்டார சந்நிதி வழக்கு பழமையை போற்றுவதாகும். காலத்திற்கேற்ப புதிய வழக்கையும் ஏற்றுக் கைகொண்டார். 
யஇவர் மிகச்சிறந்த பேச்சாளராக, சமயப் பிரசாரகராக,  திருமுறைப்பாக்களை இசையோடு பாடவல்லவராக, ஆங்காங்கே விழாக்களில் மாநாடுகளில் பரவலாக கலந்து கொண்டு உரையாற்றி திறம்படவிளங்கினார்
இவர்என்னுடையசென்னை,திருநெல்வேலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருநெல்வேலி சென்றால் பெருங்குளம் சென்று இவரை சந்தித்து பேசுவதுண்டு.

கடந்த 2014-ம் ஆண்டில் திருவாவடுதுறை குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளின் குரு பூஜைக்கு 100-ஆவது செங்கோல் மட குருமகா சந்நிதானம் சீர்வளாசீர் கல்யாண சுந்தர சத்திய ஞான பண்டார  சந்நிதி  சுவாமிகள் அவர்கள் குருபூஜை முடிந்து திரும்பும் வழியில் கும்பகோணத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.திருநெல்வேலி வரை வந்த பின்  18-1-2016  அன்று மறைந்தார்.

இந்த  திருமடத்தின் 102வது குருமகா சன்னிதானமாக. இருந்த. ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகளின் தொடர்ந்து  தற்போது  குருமகா சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள் மடத்தின் 103 செங்கோள் ஆதீனமாக பட்டம் பெற்று திருப்பணி ஆற்றுகிறார்.

இவர் திருவாடுதுறை ஆதீன தம்பிரான் ஆக இருந்து காலத்திலிருந்து எனக்கு நல்ல அறிமுகம். எனது மனைவி 2014 மறைவுக்கு முன் சென்னைஅப்பேலோ மருத்துவமனை
யில் சிகிச்சை பெற்ற போது  நேரில் வந்து நெற்றியில் விபூதி இட்டுக் பிரார்த்தனை செய்தார்.

 https://swasthiktv.com/mahans/செங்கோல்-ஆதீனம்-அருள்-வர/

#பெருங்குளம்_செங்கோல்_ஆதீனம்
#sengol
#Perungulam_segol_mutt
#tirunelveli
#பாண்டியர்_கால_செங்கோல்
#pandyanempire
#திருநெல்வேலி

#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர்,,, #கே_எஸ்_இராதாகிருஷ்ணன்,

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-5-2023.


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...