Monday, August 28, 2023

#டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன்ஆசிரமம் #ஜே.சி.குமரப்பா, #கோ.வேங்கடாசலபதி

#டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன்ஆசிரமம் 






#ஜே.சி.குமரப்பா, #கோ.வேங்கடாசலபதி



—————————————————————
இன்று (28-8-2023) மதுரை செல்லும். வழியில் சீலார்பட்டி மறைந்த தம்பி வாசுதேவன் இல்லத்துக்கு சென்று விட்டு டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம் சென்றேன். கடந்த  1940ல் காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு, என். எம். ஆர். சுப்பராமன் மற்றும் அ. வைத்தியநாத ஐயர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி, கோ. வேங்கடாசலபதி, மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தே. கல்லுப்பட்டி பேரூராட்சியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. 1956ல் காந்தியவாதி ஜே. சி. குமரப்பா, காந்தி நிகேதன் ஆசிரமத்தை பதிவு செய்யப்பட்ட சங்கமாக நிறுவினர்.




அங்கு இருக்கும் ஜே. சி. குமரப்பா, கோ. வேங்கடாசலபதி  சமாதிகளை வணங்கினேன். கோ. வேங்கடாசலபதி  அன்றைய சென்னை மாநிலத்தில் கிராமங்களில் ஆரம்ப  பள்ளிகளை நிறுவினர். இவர் எனக்கு உறவினர். இன்றைக்கும் அந்த  ஓட்டு கட்டிட பள்ளிகள்
பல கிராமங்களில் உறுதியாக கட்டுமானத்
தோடு இருக்கிறது. ஜே. சி. குமரப்பா, கோ. வேங்கடாசலபதி  ஆகியோர் கிராம ஆதார பணிகள், சுய சார்பு விவசாய முறையை மக்களிடம் கொண்டு சென்றவர்கள்…ஜே. சி. குமரப்பா உத்தமர் காந்தியின் நெருங்கிய சகா.




#டி_கல்லுப்பட்டி_காந்திநிகேதன்_ஆசிரமம் 
#ஜே_சி_குமரப்பா, 
#கோ_வேங்கடாசலபதி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
28-8-2023.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...