Tuesday, August 22, 2023

#HBD Madras #சென்னப்ப நாயக்கர் பட்டினம் #சென்னை தினம் #மெட்ராஸ் #ChennaiDay2023

சென்னை நகர் என இன்றைய நகரத்தை ஆங்கில கிழக்கு இந்தியா கம்பெனிக்கு வழங்கிய
தமர்லா சென்னப்ப நாயக்கர்.
நன்றி தமிழ் விக்கிபீடியா- இதை நான் சொல்லவில்லை
——————————————-
 தமர்லா சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka), காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார். [1][2] [3][4][5] [6][7] [8][9] [10] [11][12][13][14] [15][16] [17][18][19]சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா[20] யாச்சம நாயக்கரின் தங்கை ஆவர் [21][22] [23] மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா வின் மகள் [24] இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர் . [25][26][27]விஜய நகரப் பேரரசின் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர்.[28][29] இம்மன்னர் உருவாக்கிய நகரமே சென்னப்பநாயக்கர் பட்டிணம். அதுவே தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது.[30][31] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். [32].   [33][34] [35] [36] [37] [38] [39] [40] [41]

தமர்லா வெங்கடப்ப நாயக்கர்
தொகு
தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா மகன் என்றும் . தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தமர்லா அப்பா நாயக்கர் என்றும் குறிப்பிட்டு உள்ளார் . [42] விஜய நகரப் பேரரசர் மூன்றாம் வேங்கடராயர் எனப்பட்ட  வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் [43][44] [45] [46] [47] இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா நாயக்கர் என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர்.

தமர்லா அய்யப்ப நாயக்கர்
தொகு
இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவரின் தாயார் லிங்கம்மா ஆவார் இவர் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.

தமர்லா அங்கபூபாலன்
தொகு
தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவர் [48] தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவார்[49] [50][51] . இவரை அக்கப்ப நாயக்கர் எனவும் அழைக்கின்றனர் [52] . [53] . இவரின் தாயார் திம்மம்மா ஆவார் . [54] . [55][56] இவர் உஷா பரிணயம் [57] [58] [59] என்னும் இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம் என்னும் நூல் ( 16 குணங்கள் ங்் ந்்் 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் . [60]. [61][62]

தமர்லா திம்ம நாயக்கர்
தொகு
தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் [63][64] .இவரின் தாயார் திம்மம்மா ஆவார் .இவர் தமர்லா திம்ம நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர். தமர்லா திம்ம நாயக்கர் காளஹஸ்தி அரசவையில் புலவர் முன்பள்ளி சுப்பிரமணிய கவி இருந்தார் .[65]. தமர்லா திம்ம நாயக்கர் பல இலக்கியங்கள் எழுதியுள்ளார் .

தமர்லா சின்ன வெங்கடபூபாலன்
தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் . இவரின் தாயார் வெங்கம்மா ஆவார் . இவர் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். .

••••••••

1600-களில் இங்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர், இந்தியாவின் பல பகுதிகளில் தங்களது வணிகத்தை விஸ்தரித்து இருந்தனர். மசூலிப்பட்டினத்தில் 
தங்கள் வணிகம் சரிவர நடைபெறாததால், தெற்கு நோக்கி நகர முடிவு செய்தனர். தென்னகத்தில் தங்களுக்கு ஏற்ற இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். 

தங்களுக்கு வசதியாக ஒரு இடத்தை கம்பெனி அதிகாரிகள் பார்த்தனர். அந்த இடம்,
சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர், மூன்றாம் வேங்கடப்பரின் தம்பி அய்யப்பர், பூந்தமல்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பகுதியில் இருந்தது. அய்யப்பரின் ஆட்சிப் பகுதி புலிக்கட்டிலிருந்து, அதாவது பழவேற்காடு ஏரியில் இருந்து சாந்தோம் வரை உள்ள கடற்கரைப்பகுதி. 

அதில், சாந்தோமுக்கு 5 கிலோ மீட்டர் வடக்கில், மீனவர் வாழும் கிராமத்தைத் தான் ஆங்கிலேயே அதிகாரிகள் தேர்வு செய்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த Francis Day, மசூலிப்பட்டினத்தில் இருந்த மேலதிகாரியின் அனுமதி பெற்று, வேங்கடப்பரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 1639ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி சாந்தோமுக்கு 5 கிலோ மீட்டருக்கு வடக்கில், மீனவர் வாழும் அந்த கிராமத்தில் தங்களது வணிக தளத்தை அமைக்க ஒப்பந்தம் போட்டார். இதற்காக கிழந்திய கம்பெனியினர், ஆண்டுக்கு 600 பவுண்ட் வாடகையை வெங்கடப்பரிடம் கொடுக்க வேண்டும். 

இடத்தை வாங்கியாச்சு. சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பகுதியான துறைமுகத்திற்கு அருகில் நிர்வாகத்தை கவனிக்கவும், அதிகாரிகள் தங்கிக் கொள்ளவும் ஒரு கோட்டை இருந்தால் நல்லது என்று முடிவு எடுத்த ஆங்கிலேய அதிகாரிகள், ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்தனர். 

கோட்டையின் ஒருபகுதி கட்டி முடிக்கப்பட்டு, 1640 ஏப்ரல் 23ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்று புனித ஜார்ஜ் நாள் என்பதால், அந்தக் கோட்டைக்கு, புனித  ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.  பின்னர் வெகு சீக்கிரமே ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை மாறியது.

வேங்கடப்பரிடம் இருந்து Francis Day வாங்கிய மீனவர் வாழ்ந்த  கிராமம், வேங்கடப்பரின் தந்தை சென்னப்பர் என்பவர் பெயரால் சென்னப்பட்டினம் என அழைக்கப்பட்டு, சென்னை மாநகரமானது தனி கதை. 

ஆங்கிலேயர்களிடம் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை
பிரெஞ்சுக்காரர்கள் 1746ல் போரிட்டு கைப்பற்றினர். பின்னர் 1749ல் Aix-la-Chapelle ஒப்பந்தம் மூலம், ஆங்கிலேயர்கள் மீண்டும் கோட்டையை கைப்பற்றினர்.
இதனையடுத்து கோட்டையை பலப்படுத்த இறங்கிய கோட்டை பொறுப்பாளர்
ராபர்ட் கிளைவ், உடனடியாக கோட்டையைச் சுற்றி அகழி ஏற்படுத்தினார். 20 அடி உயரம் கொண்ட பெரும் சுவர்களையும் கட்டினார். 

கிட்டத்தட்ட 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், வெல்லஸ்லி இல்லம், கிளைவ் இல்லம், டவுன் ஹால், ஆங்கிலேயப் படைகள் தங்கிய பாரக்ஸ் கட்டடம் ஆகியவை தற்போதும் உள்ளன. 

கோட்டையைப் போன்றே, அதில் கம்பீரமாக வானுயரக் காட்சியளிக்கும் கொடி மரமும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில், தேக்கு மரத்தினால் ஆன கொடிக் கம்பத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் கொடி பறந்துகொண்டிருந்தது. அதில், கவர்னர் யேல் காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறக்கவிடப்பட்டது. கடற்கரையில் தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலில் இருந்த தேக்கு மரத்தால் ஆன கம்பம் எடுத்துவரப்பட்டு, கோட்டைக் கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பம்தான், இந்தியாவிலேயே உயரமானது. இந்தியச் சுதந்திரத்தின்போது, இதில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தேக்கு மரத்தினால் ஆன இந்தக் கொடிக்கம்பம் பழுதடைந்ததால், 1994-ல், இரும்பு கம்பம் நிறுவப்பட்டது. 

தமிழகத்தின் முதல் சட்டமன்றம் 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு Madras Legislative Council என்று பெயர். இந்த சட்டமன்றம், முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில், 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. இந்த சட்டமன்றத்தில், சுதந்திரத்திற்கு முன்பு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில், நீதிக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பராயுலு ரெட்டியார், முதல் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது முதலமைச்சர் என்று பெயர் கிடையாது சென்னை ராஜதானி நிர்வாகத்தின் தலைவருக்கு முதல் -மந்திரி என்று தான் பெயர். 
முதலமைச்சர் என்ற பெயர் வந்தது ஒரு தனி கதை. 

1920 முதல், பிரதம -மந்திரி என்று இருந்த பெயர் 1937 ஏப்ரல் முதல் நாளில் நடைமுறைக்கு வந்த மாகாண சுயாட்சி சட்டப்படி மாகாணம் என்று மாற்றப்பட்ட அரசின் நிர்வாக தலைவருக்கு, பிரதம மந்திரி என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் நிர்வாக தலைவருக்கும் பிரதம மந்திரி என்று பெயர், மாகாண நிர்வாகத் தலைவருக்கும் பிரதம மந்திரி என்ற பெயர் நடைமுறையில் இருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாகாண பிரதம மந்திரி என்ற பெயர், பிரிமியர் என்று மாற்றப்பட்டது. 1950 ஜனவரி 26ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய சட்டப்படி மாகாணங்கள், மாநிலங்கள் என்றானது. இதனையடுத்து, மாநில அரசின் நிர்வாக தலைவர் முதலமைச்சர் என்றானது.



****
#ksrpost
# கேஎஸ்ஆர்போஸ்ட்
22-8-2023.

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...