Sunday, August 27, 2023

#பி_எச்_பாண்டியன் (P. H. Pandian,

#பி_எச்_பாண்டியன் (P. H. Pandian, (29 மார்ச் 1945– 4 ஜனவரி 2020)
—————————————————————-

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில்  உள்ள அண்ணன் பி. எச். பாண்டியன் நினைவிடத்தில் இன்று (27-8-2023) …..கடந்த  1976 முதல்  மறையும் வரை இவர்  என் மீது தம்பி என்று அன்பு காட்டியவர். சக வழக்கறிஞர். எம்ஜிஆரிடம் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழைத்து சென்ற முன்பே  இவர் மூலம் அறிமுகம்.

அவருடைய இந்த  நினைவு மண்டபத்துக்கு செல்ல நீண்ட நாட்களுக்கு பின் இன்று செல்ல முடிந்தது. இவருடன் பயணித்த ஐரோப்பிய நாடுகள். பல முறை டில்லி மற்றும் காஷ்மீர், கேரள மட்டும்மல்ல தமிழகத்தில்  பல  பகுதிகள் என இன்றும் நினைவுகள்… காஞ்சி பெரியவர், ஜானகி அம்மா ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில், அவரின் ஆட்சி கலைப்பு நேரத்தில் பேரவைத் தலைவராக பாண்டியன்



இருந்த நேரத்தில் எனக்கு ஒரு வார கால முக்கிய பணிகளை நம்பி கொடுத்தார். அவரின் கட்சியில் கூட இல்லை. இவை நான் திமுகவில் சேரும் 1987க்கு முன்பு நடந்தவை. பி. எச். பாண்டியன் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி டி. என். சிங்காரவேலு தீர்ப்பை தமிழக சட்டப்பேரவையில் ரத்து செய்தது என பல நிலைகளில் உடன் இருந்தவன்.

1980 பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார்.இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 1989 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.

#பி_எச்_பாண்டியன் #P_H_Pandian, 
#திருநெல்வேலிமாவட்டம் 
#சேரன்மகாதேவி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-8-2023.


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...